தமிழ்நாடு

tamil nadu

கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியீடு எப்போது?- ராம் சரண் கூறிய முக்கிய அப்டேட்! - actor ram charan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 9:42 PM IST

actor ram charan: சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ராம் சரண், கேம் சேஞ்சர் திரைப்பட வெளியீடு குறித்து பேசியுள்ளார்.

கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியீடு எப்போது
கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியீடு எப்போது

சென்னை: வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் டி‌.ஜி‌.சீத்தாராம் தலைமை ஏற்று விழா பேருரை ஆற்றினார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நிறுவனர், வேந்தர் ஐசரி கணேஷ் தலைமையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியீடு எப்போது

மேலும் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் இஸ்ரோ வீரமுத்துவேல், நடிகர் ராம் சரண், trivitron health care நிறுவனர் ஜிஎஸ்கே வேலு, இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் பத்மஸ்ரீ சரத் கமல் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐசரி கணேஷ் மற்றும் ராம் சரண் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராம்சரண், "என்னை அழைத்து இதுபோன்ற மரியாதை செய்ததற்கு கணேஷ் சாருக்கு நன்றி. என் அம்மா எனக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதை நம்பவில்லை.‌

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவன். இன்று பட்டதாரிகள் அனைவரும் ராணுவ வீரர்கள் போல் இருக்கின்றனர். அவர்கள் முன்பாக எனக்கு இந்த மரியாதை கொடுத்ததற்கு நன்றி. இந்த விருது எனதல்ல, எனது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முக்கியமாக எனது ரசிகர்களுடையது. டாக்டர் பட்டத்தை பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு ராம்சரண் யோசிப்பேன் என பதிலளித்தார். மேலும் எனது அப்பா, எனது மனைவியின் தாத்தா, 80 சதவீத தெலுங்கு சினிமா கலைஞர்கள் சென்னையில் இருந்துதான் வாழ்க்கையை தொடங்கினார்கள்.

நீங்கள் ஒரு கனவுடன் சென்னைக்கு வந்தால் அது நினைவாகிவிடும். வாய்ப்புகளுக்கும் கனவு காண்பவர்களுக்கான இடமாக இருக்கும் சென்னைக்கு நன்றி. நான் இங்குதான் பிறந்தேன், படித்தேன், வளர்ந்தேன், டாக்டர் பட்டமும் இங்குதான் வாங்கியுள்ளேன். இதுதான் சென்னை எனக்கு தந்தது” எனக் கூறினார்.

பின்னர் பேசிய ஐசரி கணேஷ், "ஆஸ்கர் வரை போய் வந்தவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்காமல் இருந்தால் எப்படி என்ற எண்ணத்தில் தான் ராம் சரணுக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவரை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தில் தான் டாக்டர் பட்டம் கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக அவரை வைத்து படம் தயாரிப்பேன் என ஐசரி கணேஷ் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து தனது திரைப்படங்கள் குறித்து பேசிய ராம்சரண், “ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் நடித்து வருகிறேன். இப்படத்தில் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளனர். நான் முதல்முறையாக அரசியல் படம் நடிக்கிறேன். செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபரில் ஐந்து மொழிகளில் கேம் சேஞ்சர் வெளியாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: திடீர் நெஞ்சுவலியால் சுருண்ட நடிகர் சாயாஜி ஷிண்டே! மருத்துவமனையில் வீடியோ வெளியிட்டு நன்றி!

ABOUT THE AUTHOR

...view details