தமிழ்நாடு

tamil nadu

மணல் குவாரி விவகாரம்; அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 4:32 PM IST

why-state-filed-petition-against-ed-summonses-to-district-collectors-sc-to-tn
அமலாக்கத்துறை ஆட்சியருக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது ஏன்? உச்ச நீதிமன்றக் கேள்வி..

Supreme Court: மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட சம்மன் மீது விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

டெல்லி:தமிழ்நாட்டிலுள்ள மணல் குவாரிகளில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்பின், அமலாக்கத்துறை, சட்ட விரோத மணல் குவாரிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறைப் பொறியாளர் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனுக்கு எதிராக பொதுப்பணித்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மேலும். தமிழக அரசுத் தரப்பிலும் அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் மீது விசாரணை செய்ய இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இவ்வாறான சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதேபோல் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (பிப்.23) நீதிபதி பெலா எம் திரிவேதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து, அமலாக்கத்துறை தரப்பில், சட்டவிரோத மணல் குவாரியில் தமிழக அரசு தலையீடு இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பில் ரிட் மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? எந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது? அமலாக்கத்துறை சம்மன் குறித்து மாநில அரசு கலக்கம் அடைவது ஏன் என பல்வேறு கேள்விகளை எழுப்பி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:"மெத்தனமாக இருந்து விடாதீர்கள்!"- ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! கலக்கத்தில் நிர்வாகிகள்

ABOUT THE AUTHOR

...view details