டிக்கெட் விலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நடிகர்களுக்கு உண்டு - இயக்குநர் பாக்யராஜ்

By

Published : Jan 31, 2020, 11:44 PM IST

thumbnail
()

இயக்குநர் மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் 'புறநகர்' இசைவெளியிட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், 'ஒரு கை ஓசை ' படத்திலேயே நான் சாதியை எதிர்த்துள்ளேன். வெள்ளாங்கோயில் எனும் ஊரில் என் சிறுவயதில் சாதித் தீண்டாமையை டீக் கடைகளில் பார்த்தேன். அதை மனதில் வைத்துதான் 'சங்கிலி முருகன்' எனும் கதாபாத்திரத்தை அந்தப் படத்தில் இணைத்தேன் , சாதிப் பிரச்சனை தற்போது அதிகமாகியுள்ளது. அனைவரும் சமம் , சாதி கிடையாது என்பது நகரங்களைப் போல கிராமங்களிலும் வர வேண்டும். சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மற்றவர்களளுக்கு வழங்க முன்வர வேண்டும் , டிக்கெட் விலையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கதாநாயகர்களுக்கும் உண்டு என்றார்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.