Mayankulam Mariyamman Festival - மாயங்குளம் மாரியம்மன் கோவில் தீ மிதி விழா

By

Published : Jul 22, 2023, 12:45 PM IST

thumbnail

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த மாயங்குளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சக்தி மாரியம்மன் ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு தீ மிதித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 

முன்னதாக, பால் குடம் எடுத்தல், கூழ் வார்க்கும் திருவிழா, அதனைத் தொடர்ந்து கரகம் ஜோடித்து அங்காளபரமேஸ்வரி வேடமணிந்து, தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து தீ மிதித் திருவிழா நடைபெற்றது. இதில் மாயங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

இதேபோல், திருக்கோவிலூர் அடுத்த வி.புதூர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா நடைபெற்று வந்தது. விழாவின் 9வது நாளான நேற்று தேர் தீ மிதித் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து முக்கிய விதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். 

தேர் நிலையை அடைந்தவுடன் பக்கதர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.