பள்ளி பேருந்தில் சிசிடிவி, மினி டிவி திருட்டு; அய்யம்பாளையம் மருதீஸ்வரன் கைது!

By

Published : Jul 13, 2023, 4:00 PM IST

thumbnail

திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டியில் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி வேனில் இருந்த 2 சிசிடிவி கேமராக்கள், 2 மினி டிவி மானிட்டர்களை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது தேவதானப்பட்டி கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் சங்கர் (53). இவருக்கு சொந்தமாக ஈச்சர் மினி வேன் (TN 59 CU 8091), டாடா மினி பஸ் (TN 59 CU 3317) ஆகிய இரண்டு வாகனங்கள் உள்ளன. இந்த இரண்டு வாகனங்களையும் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பள்ளி பேருந்தாக இவர் பயன்படுத்தி வருகிறார்.

இந்த இரு வாகனங்களையும் பட்டிவீரன்பட்டி காந்திபுரம் பகுதியில் உள்ள கண்ணன் என்பவருக்கு சொந்தமான வாகனம் நிறுத்தும் ஷெட்டில் நிறுத்தி வைப்பார். இரவு நேரங்களிலும் இந்த ஷெட்டில் வாகனங்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூலை 9 ம் தேதி இரவு 11 மணி அளவில் இந்த இரண்டு வாகனங்களில் இருந்தும் கண்ணாடிகளை உடைத்து இரண்டு சிசிடிவி மற்றும் 2 மினி டிவி மானிட்டர்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். 

இதனை அறிந்த உரிமையாளர் சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசரணையின் முடிவில் அய்யம்பாளையம் பேரூராட்சி நாகரத்தினம்மாள் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் மருதீஸ்வரன் (33) தான் திருடியதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்தீஸ்வரனை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.