உலக தேயிலை தினம்; தென்னிந்தியாவில் முதன்முறையாக குன்னூரில் தேயிலை கண்காட்சி

By

Published : May 21, 2023, 11:09 PM IST

thumbnail

நீலகிரி: குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரியம், தமிழக சுற்றுலாத்துறை, தமிழகத் தோட்டக்கலைத் துறை, இன்கோ சார் ஆகியவை இணைந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக இரண்டு நாட்களுக்கு தேயிலை கண்காட்சி இன்று (மே 21) முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. உலக தேயிலை தினத்தை முன்னிட்டு தேயிலை கண்காட்சியில் பங்கேற்ற சிறுமிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த தேயிலை கண்காட்சியில் உலக தேயிலை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தேயிலை கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த தேயிலை கண்காட்சியில் பொதுமக்கள் எது உண்மை மற்றும் சரியான தேயிலை என்றும் அந்த தேயிலையின் தரம், ருசி, அதனுடைய வண்ணம் மற்றும் தரம் எப்படி உள்ளது என்றும் தேயிலையை எந்த நிறத்தில் வந்தால் அது கலப்பட தேவையில்லை என்று அறியும் வகையில் 

சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செயல்முறையும் காண்பிக்கப்பட்டது. இந்த செயல்முறையை ஏராளமான சுற்றுலா பயணிகள், தேயிலை தரத்தையும் அதன் சுவையையும் ருசித்துப் பார்த்து தெரிந்து கொண்டனர். இதில், முக்கிய அம்சமாக சிறுவர் சிறுமிகளுக்கு தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து சுவையை பார்த்து என்ன மாதிரி சுவை உள்ளது என்பது சரியாக சொன்னால் சொல்லும் சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இது போன்ற முறையான தேயிலை கலப்படம் இல்லாமல் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளதாக சுற்றுலா பயணிகள் மிகவும் உற்சாகத்துடன் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும், இந்த தேயிலை கண்காட்சியை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஶ்ரீரங்கம் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.