ஶ்ரீரங்கம் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்
திருச்சி: திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகின்றது. 108 வைணவ தளங்களில் முதன்மையானதுமான திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவியிலுக்கு ஏராளமான அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இன்று (மே 21) திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அங்கு சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்த அவருக்கு அக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், இசைஞானி இளையராஜா கருடாழ்வார் சன்னதி, மூலவர் ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி, ராமானுஜர் சன்னதி ஆகிய முக்கிய சன்னதிகளில் பேட்டரி கார் மூலம் சென்று சாமி தரிசனம் செய்தார். இவ்வாறு இசைஞானி இளையராஜா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செய்தியை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அவரைக் காண குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலம் அருகே பெருமாள் கோயிலின் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளை ... போலீசார் விசாரணை