உதகையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

By

Published : Jul 13, 2023, 12:33 PM IST

thumbnail

நீலகிரி: உலக மக்கள் தொகை என்பது ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.  மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய அளவில் மக்களுக்கு எடுத்துக்கொண்டு செல்லும் வகையில் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டுடில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 11ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் ஐஏஎஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி சேரிங் கிராஸ் வரை மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் சென்றனர். இதில் சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தூய்மை குறித்து பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இறுதியில் பேரணி சேரிங் கிராஸ் பகுதியில் நிறைவடைந்தது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.