கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே எளிய முறையில் பிளம் புடிங் செய்யும் முறை

By

Published : Dec 18, 2020, 9:19 PM IST

Updated : Dec 18, 2020, 9:27 PM IST

thumbnail

பிளம் புடிங் அல்லது கிறிஸ்துமஸ் புடிங் என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு வகை உணவின் பெயரில் இருக்கும் "பிளம்" இல்லாமல் செய்வதுதான் இதன் சிறப்பு. 13ஆம் நூற்றாண்டில் வேறு சுவை மற்றும் கலவையுடன் அமைந்திருந்த இந்த பிளம் புடிங் வகை உணவுக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கிறிஸ்துமஸ் நாளில் பெரிய விருந்துகளில் கட்டாயம் தவறாமல் இடம்பெறும் இந்த உணவு வகை 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் பிரபலமானது. உலர்ந்த பழங்களால் தயாரிக்கப்படும் உணவுகளை பிளம் புடிங், பிளம் கேக் என்று அழைக்கும் வழக்கத்தை உணவு வரலாற்றாசிரியர்கள் நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில், கிறிஸ்துமஸ் நாளில் பரிமாறப்படும் உணவுப் பட்டியல்களில் பல்வேறு புதுமையான உணவுகள் வந்த போதிலும், பல நூற்றாண்டுகளாக தவறாமல் இடம்பெறும் உணவு என்ற முக்கியத்துவத்தைப் பெற்று வரும் பிளம் புடிங்கை வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையை இந்த காணொலியில் பார்க்கலாம்...

Last Updated : Dec 18, 2020, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.