பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ஆதிபுருஷ் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜம்போ டேங்கர்கள், ஒரு வாட்டர் டேங்கர் விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் நல்வாய்ப்பாக, முன்னணி நடிகர்கள் யாரும் அங்கு இல்லை.