ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர்: சாதுர்யமாக காப்பாற்றிய அலுவலர்கள்
Published on: May 13, 2022, 2:16 PM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று (மே.12) நள்ளிரவில் நடைமேடை 7இல் மின்சார ரயில் நின்றுகொண்டிருந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோ (69) என்பவர், ரயில் மீது ஏறி உயர் மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே ரயில்வே ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் சாதுர்யமாக செயல்பட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ரயில் மீது ஏறி முதியோரை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து முதியவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading...