ஏற்காட்டில் 45வது கோடை விழா
Published on: May 14, 2022, 12:03 PM IST

சேலம்: உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் 45வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 26 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் ஐந்து லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது பூக்கள் பூத்துக் குலுங்கி கோடை விழாவிற்காகக் காத்திருக்கிறது. இதனிடையே, வழக்கமாக ஏற்காடு கோடை விழா மூன்று தினங்கள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு 7 நாட்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...