ETV Bharat / sukhibhava

கோவிட்- இதய சிக்கல்களை கண்டறிவது எப்படி?

author img

By

Published : Jun 28, 2021, 10:17 PM IST

SB-CH-Cardiac Problems
SB-CH-Cardiac Problems

கோவிட் நெருக்கடி காலத்தில் இதய சிக்கல்களை அறிந்துகொள்வது எப்படி என்பது குறித்து நாம் பார்ப்போம்.

ஹைதராபாத் : கோவிட் பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், மருத்துவர் மகேந்திர காரே ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

மருத்துவர் மகேந்திர காரே, சிங்கப்பூர் இருதயவியல் துறையில் பணியாற்றியுள்ளார், அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி உறுப்பினராக உள்ளார். மேலும் கோவா மருத்துவக் கல்லூரியில் முன்னாள் விரிவுரையாளராகவும் இருந்தவர்.

இவர் கோவிட் நெருக்கடி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இருதய சிகிச்சைகள் குறித்து கூறுகையில், “நுரையீரல் செயல்பாடுகள் மற்றும் நிமோனியா குறித்து அறிய மார்பை சி.டி ஸ்கேன் செய்வது போல் இதய நோயாளிகளும் சில சோதனைகளை செய்ய வேண்டும்.

இதயம் சார்ந்த சிக்கல்கள்

அதில், ஈ.சி.ஜி, எக்கோ (ECHO) மற்றும் மேம்பட்ட எக்கோ (ECHO) ஆகியவை முக்கியமானது. இவையெல்லாம், இதயம் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய உதவும்.

அதிலும் குறிப்பாக மேம்பட்ட இரத்த பரிசோதனைகள் உள்ளன, இது நோயாளியின் இதயம் செயலிழப்பில் உள்ளதா அல்லது நுரையீரலில் பிரச்சினையா என்பதை தெரிவிக்கும்.

SB-CH-Cardiac Problems
இதய பிரச்சினைகள்

ஒருவேளை நோயாளிக்கு கடுமையான மார்பு வலி இருந்தால், மற்றும் ஈ.சி.ஜி போதுமானதாக கண்டறியப்படாவிட்டால், ட்ரோபோனின் சோதனை எனப்படும் இதய நொதி சோதனை வழக்கமாக செய்யப்படுகிறது. வலி இதயத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ என்பதை தீர்மானிக்க இந்தச் சோதனை நமக்கு உதவுகிறது.

மீட்புக்கான நேரம்:

இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. மேலும் இது கோவிட் 19 இலிருந்து நோயாளி எவ்வளவு விரைவாக வெளியே வர முடியும் என்பதைப் பொறுத்தது. பொதுவாக குணமடைதல் காலம் என்பது பாதிக்கப்பட்டவரின் நோயெதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது.

SB-CH-Cardiac Problems
கோவிட் பரிசோதனை

இந்த நேரங்களில் நோயெதிர்ப்பு மருந்துகள் முக்கியமானவை. ஆபத்து காலத்தில் இந்த மருந்துகள் நல்லமுறையில் வேலை செய்கின்றன.

எளிதில் பாதிப்பு

பொதுவாக கோவிட் காலங்களில் இதயத்தை பொருத்தவரை வயதானவர்கள், பைபாஸ் சர்ஜரி, ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்துகொண்டவர்கள் இயற்கையாகவே பலவீனமாக இருப்பார்கள். இவர்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அதேபோல், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக செயலிழப்பு அல்லது டயாலிசிஸ் செய்துகொண்டவர்களும் எளிதில் பாதிக்கப்படலாம்” என்றார்.

இதையும் படிங்க : தடுப்பூசி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏழை நாடுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.