ETV Bharat / sukhibhava

கர்ப்பக்காலத்தில் பெண் தனிமையில் இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு என்ன நடக்கும்.?

author img

By

Published : Mar 5, 2023, 6:34 PM IST

Updated : Mar 5, 2023, 7:23 PM IST

கர்ப்பக்காலத்தில் பெண் தனிமையில் இருந்தால் குழந்தையின் அறிவாற்றல் பாதிக்கப்படும்
கர்ப்பக்காலத்தில் பெண் தனிமையில் இருந்தால் குழந்தையின் அறிவாற்றல் பாதிக்கப்படும்

கர்ப்பக்காலத்தின் போது பெண் தனிமையில் இருந்ததால் வயிற்றில் வளரும் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் உடல் உணர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள UCL Psychiatry and East London NHS Foundation Trust என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில், கர்ப்பக்காலத்தின் போது பெண்கள் தனிமையில் இருந்ததால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக கர்ப்பக்காலத்தில் பெண்கள் குடும்பத்துடன் இருப்பது வழக்கம். பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டாலும், வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் கர்ப்பிணியை கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்டது.

கணவன்-மனைவி என இருவர் மட்டுமே வீட்டில் இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் கர்ப்பக்காலத்தில் பெண்கள் தனிமையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கர்ப்பக்காலத்தில் பெண்கள் நல்ல உணவுகள் உண்பது, மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவது போன்றவற்றை முறையாக செய்தாலும், தனிமையில் இருந்தால் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஆபத்து என்கிறார் UCL மருத்துவர் கேத்ரின் அட்லிங்டன்.

இதையும் படிங்க: நெகட்டிவ் எண்ணங்கள் சாதனைகளுக்கு வழிவகுக்கும்.. ஆனால் உடல் நலத்தில்.? ஆய்வில் புதிய தகவல்..

இதுகுறித்து அவர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதைப் போலவே மன நலத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்களில் ஆய்வின் முடிவில் தெரிந்து கொண்டோம். நாங்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த 537 கர்ப்பிணிகளிடையே 27 வகையான ஆய்வுகளை செய்து அந்த தகவல்களை சேகரித்தோம். இவர்கள் அனைவரும் மனசோர்வு மற்றும் தனிமையை அடிக்கடி எதிர்நோக்குவதை உறுதி செய்தோம்.

இவர்களின் மாதாந்திர செக்கப் விவரங்களையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தினோம். இவற்றின் முடிவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு எதிர்மறையாக இருந்தன. அதாவது, தனிமையில் இருக்கும் கர்ப்பிணிகளில் 6 பேரில் ஒருவரின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சிகளின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சத்தம் கேட்டால் உதைப்பது, வேகமாக உடல் உறுப்புகள் வளர்வது தாமதமாகிறது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே கர்ப்பக்காலம் முழுவதும் தனிமையில் இருக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால், முடிவுகள் இன்னும் பின்னடைவாக இருக்கலாம். ஆகவே, கர்ப்பக்காலத்தில் தனிமையில் இருப்பதை பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தனிமை என்பது பொதுவாகி விட்டாலும், அதனால் ஏற்படக்கூடிய மனநலப் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இது உணர்ச்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தும், கோபத்துக்கும் மகிழ்ச்சிக்கும் வேறுபாட்டை அறிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுவதை காண முடியும். இது தனிப்பட்டவையாக இருக்கும்போது பெரிய பாதிப்புகள் கிடையாது. ஆனால், கர்ப்பகாலத்தின் போது வளரும் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் அதிக கவனத்துடன் கையாள வேண்டும். ஆகவே, கர்ப்பிணிகளை தனிமையில் விடுவதை கணவர்களோ, குடும்பத்தினரோ கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்.. தொண்டை வலி முக்கிய அறிகுறி.. குழந்தைகளை தாக்கும் அபாயம்..

Last Updated :Mar 5, 2023, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.