ETV Bharat / sukhibhava

முகம் பளபளக்க வேண்டுமா... டிராகன் பழம் ஒன்றே போதுமே!...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:41 PM IST

டிராகன் பழத்தை வைத்து பேஷ் பேக் போடலாம். எப்படினு பார்க்கலாமா?
How to use Dragon fruit for skin care

How to use Dragon fruit for skin care in Tamil: டிராகன் பழத்தை வைத்து பேஷ் பேக் போடலாம். எப்படினு பார்க்கலாமா?

சென்னை: நாட்டு காய்கறிகள் மற்றும் பழங்களை விட ஆங்கில காய்கறிகள் மீதும் பழங்களான பிரக்கோலி, ஸ்ட்ராபெர்ரி மீது நமக்கு எப்போதுமே மோகம் அதிகம் தான். அந்த வகையில் தற்போது ட்ரண்டான வெளிநாட்டு பழம் தான் டிராகன் பழம். பார்ப்பதற்கு டிராகன் போன்று இருப்பதாலே இதற்கு டிராகன் பழம் என்று பெயர் வந்தது. இதன் நிறம் கண்களை கவரும் வகையில் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுவர்.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட டிராகன் பழம் சுவையானது மட்டுமில்லை சத்தானதும் தான். இதில் தாதுக்கள், விட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலிற்கு தேவையான சத்துக்களை தருகின்றன. இந்த டிராகன் பழம் சரும பாதுகாப்பிற்கும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?. சரும பாதுகாப்பிற்காக நாம் பல்வேறு அழகு குறிப்புகளை பின்பற்றுகிறோம்.

சரும பாதுகாப்பில் டிராகன் பழம்: அந்த வகையில் சரும பாதுகாப்பிற்காக டிராகன் பழத்தை பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான முகத்தைப் பெறலாம். டிராகன் பழம் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்யவும், முகத்தில் படியும் எண்ணெய் பசையையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் முகப்பருக்களை நீக்கவும் உதவுகிறது. இவ்வாறு சரும பாதுகாப்பிற்கு உகந்த டிராகன் பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? டோண்ட் வொரி. இப்படி ட்ரை பண்ணுங்க.

டிராகன் பழம் பேஷ் பேக்: முதலில் நன்றாக பழுத்த டிராகன் பழம் ஒன்றை எடுத்து கொள்ளவும். பழத்தின் சதையை தொடும் போது மென்மையாக இருக்க வேண்டும். இதை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை எடுத்து கொள்ளவும். பழத்தின் தோலை நீக்கி விட்டு, பழத்தில் உள்ள விதைகளையும் களைந்து விட வேண்டும். அதன் பின் பழத்தின் சதையை பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும். இப்போது இந்த பேஸ்டை முகத்தில் தடவி, பேஷ் பேக் போட்டுக்கொள்ளலாம். 15 முதம் 20 நிமிடங்களுக்குப் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இந்த டிராகன் பழம் பேஸ்டுடன், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர், சில துளிகள் பாதாம் எண்ணெய் (Almond Oil) அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பேஷ் பேக் போடலாம்.

டிராகன் பழம் பேஷ் பேக்கை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை போட்டுக்கொள்வது சிறந்தது. இந்த பேஷ் பேக்கை தொடர்ந்து முகத்தில் போட்டு வரும் பட்சத்தில் சருமத்தின் நிறம் மேம்படும். மேலும் முகமும் பளபளப்படையும்.

இதையும் படிங்க: கண்களுக்குப் போடும் மேக்கப்பால் கண் பார்வைக்கு ஆபத்தா? என்ன செய்யலாம்.?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.