ETV Bharat / sukhibhava

மன அழுத்தத்தில் ஆண், பெண் இடையே வேறுபாடு: ஆய்வு முடிவு கூறுவது என்ன?

author img

By

Published : Aug 7, 2023, 2:51 PM IST

Etv Bharat
Etv Bharat

மன அழுத்தம் என்பது அனைவரது மத்தியிலும் பொதுவானதாக இருந்தாலும், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே அதற்கான காரணிகளிலும், வெளிப்படுதல்களிலும் மாற்றம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மன்: ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஏற்படும் மன அழுத்தத்திற்கான சிகிச்சைகளிலும், மன ஆரோக்கியத்திற்கான அறிவுறுத்தல்களிலும் சமூக ரீதியான சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மன அழுத்தம் என்பது உலக மக்கள் இடையே அதிகரித்து வரும் சமூக நோயாக மாறியுள்ளது. வேலை, பொருளாதாரம், குடும்பம், நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுவாக அனைவருமே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகினர்.

இந்த சூழலில் இது குறித்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆய்வுக் குழு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு மொத்தமாக சுமார் 2 ஆயிரத்து 890 பேரிடம் மன அழுத்தம் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தொடர் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த ஆய்வில் ஆயிரத்து 520 பெண்களும், ஆயிரத்து 370 ஆண்களும் உட்படுத்தப்பட்டனர்.

இரு பாலருக்கும் நடைபெற்ற இந்த ஆய்வில், பெண்கள் மற்றும் ஆண்கள் இடையே மன அழுத்தம் மற்றும் அதன் வெளிப்பாட்டில் அதீத வேறுபாடுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை பொதுவாக அனைவரும் குடும்பம் மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களில் அதீத மன அழுத்தம் கொண்டு உள்ளனர். பயம், பதட்டம் உள்ளிட்ட வெளிப்பாடுகள் அவர்களிடம் தென்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பதின்ம வயதினர் இடையே அடிக்கடி ஏற்படும் தலைவலி, தற்கொலை எண்ணத்துடன் தொடர்புடையதா?

அதேபோல ஆண்களிடம் வேலை மற்றும் வேலையின்மை குறித்த பதட்டமும், பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பான திகைப்பும் வெளிப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடையே ஏற்படும் நோய்கள் குறித்தும் பொதுவான மன அழுத்தம் அனைவரது மத்தியிலும் காணப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் குழு, கரோனா காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கும், சாதாரண சூழ்நிலைக்கும் இடையே மன அழுத்தத்தில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் கண்டுபிடிப்புகளில் பொதுவான கருத்துகள் அனைத்தும் ஒத்துப்போகின்றன எனத் தெரிவித்து உள்ளனர். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஏற்படும் மன அழுத்தத்திற்கான சிகிச்சைகளிலும், மன ஆரோக்கியத்திற்கான அறிவுறுத்தல்களிலும் சமூக ரீதியான சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என ஆய்வாளர்கள் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: சிறுநீரக கற்களை உருவாக்குமா வெள்ளை சர்க்கரை பயன்பாடு: ஆய்வு கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.