ETV Bharat / sukhibhava

முட்டை ஓட்டிற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்... உங்களுக்கு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 8:49 PM IST

egg shells for beauty care in tamil
egg shells for beauty care in tamil

egg shells for beauty care in tamil: நாம் தூக்கி எறியும் முட்டை ஓடுகள் சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.

சென்னை: உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் அதிக சத்துள்ள முட்டையை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இதன் காரணமாக தற்போது எல்லார் வீடுகளிலும் முட்டை உணவாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் முட்டை ஓடுகளை மட்டும் குப்பைகளில் தூக்கி வீசுகிறோம். அப்படி நாம் குப்பைகளில் எறியும் முட்டை ஓட்டில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்று தெரியுமா?..

முட்டை ஓடுகளை வைத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, முட்டை ஓடுகள் செடிகளுக்கு நல்ல உரம் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் முட்டை ஓடுகள் மண்ணிற்கு மட்டும் உரம் அல்ல.. அழகிற்கும் தான். முதலில் முட்டை ஓட்டில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று தெரிந்து கொள்வோம். ஒரு கிராம் முட்டை ஓட்டில், 400 மி.கி கால்சியம், புராட்டின், ப்ளூரைடு, மெக்னீசியம், செலீனியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

முட்டை ஓடுகளை எப்படி பயன்படுத்த வேண்டும்: முட்டையின் ஓடுகளை சேமித்து வைத்து, வெந்நீரில் ஊற வைத்து சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் அவற்றை நன்றாக உலர்த்தி, பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.

இறந்த செல்களை நீக்க ஃபேஸ் பேக்: இறந்த செல்கள் முகத்திலேயே தங்குவதால், சீரற்ற சருமம், கருமை, கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படும். அதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது அவசியம். முட்டை ஓடுகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உற்பத்தி செய்யும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ஓடுகளில் உள்ள கால்சியம் புதிய செல்களை உற்பத்தி செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொடித்த முட்டை ஓட்டுடன், முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து பேஸ்ட் போல் கலக்க் வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து, கழுவ வேண்டும். இதை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும். முட்டை சருமத்திற்கு எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது.

கரும்புள்ளிகளை நீக்க: சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி சரும வறட்சி, சிவப்பு நிற வெடிப்பு, கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படும். இப்படிபட்டவர்கள் முட்டை ஓடுகளை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கிண்ணத்தில் பொடித்த முட்டை ஓட்டை சேர்த்து அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து 4 முதல் 5 நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின் பஞ்சை எடுத்து, இந்த பேஸ்டில் நனைத்து, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மென்மையான சருமத்திற்கு: ஒரு ஸ்பூன் முட்டை ஓட்டு பொடியுடன், சிறிது தேன் கலந்து பேஸ்டாக கலந்து, இதை முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்குப்பிறகு முகத்தை கழுவினால் போதும். சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

வெண்மையான பற்களுக்கு: முட்டை ஓட்டு பொடியுடன் ஒரு சிட்டிகை சமையல் சோடாவைச் சேர்த்து கலந்து, அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய்யை சேர்த்து, பல் துலக்கினால் பற்கள் வலுவாக இருப்பது மட்டுமின்றி வெண்மையாக இருக்கும். இது போன்று வாரத்தில் ஒருமுறை பல் துலக்குவது நல்லது.

இதையும் படிங்க: தேங்காய் நாரில் இவ்வளவு நன்மைகளா?... என்னனு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.