ETV Bharat / sukhibhava

பைபாஸ் அறுவை சிகிச்சை எப்போது செய்ய வேண்டும்?

author img

By

Published : Jun 23, 2023, 6:59 AM IST

Updated : Jun 23, 2023, 9:54 AM IST

பைபாஸ் சிகிச்சை எப்போது செய்ய வேண்டும்?
பைபாஸ் சிகிச்சை எப்போது செய்ய வேண்டும்?

மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும் என்பது குறித்தும், அதிலிருந்து இளம் தலைமுறையினர் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்றும் விளக்குகிறார் மருத்துவர் அசோக் குமார்.

பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் இளம் வயதினருக்கு மாரடைப்புக்கான காரணம் குறித்து டாக்டர் அசோக் குமார் விளக்கம்

ஹைதராபாத்: இதயத்தின் ரத்தக் குழாய்களில் சேரும் அடைப்புகள் பற்றி நிறைய குழப்பங்கள் பொதுமக்களுக்கு இருக்கும். எந்த மாதிரியான அடைப்புக்கு என்ன பிரச்னை வரும் என்றும் இது குறித்த புரிதல் எல்லோருக்கும் இல்லாமல் இருக்கும்.

இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு (Blood vessels) ஏற்படுவதை கேள்விப்பட்டிருப்போம். பிளாட் என்பது கொலஸ்ட்ரால் டெபாஸிட்ஸ் வந்து இதயத்துக்கு ரத்தம் சப்ளை செய்யும் ரத்தக் குழாய்களில் வந்து நாளாக நாளாக சேர்ந்து கொண்டே வரும். உதாரணமாக, வீடுகளில் தண்ணீர் பைப்புகளில் அடைப்பு ஏற்படுவதை போன்றுதான் இதயத்திற்கு ரத்தம் செல்லும் முக்கியமான 3 பாதைகளிலும் கொலஸ்ட்ரால் மூலம் அடைப்பு ஏற்படுவதைத்தான் அடைப்பு என்கிறோம்.

இந்த பாதிப்பு 8 முதல் 100 வயது வரையிலான அனைவருக்கும் ஏற்படக் கூடியது. ஆனால், சமீபகாலமாக இந்த பாதிப்புகள் குறைவான வயதுடையவர்களுக்கு அதிகம் ஏற்படுவதை காண முடிகிறது. அது மட்டுமல்லாமல், 30 முதல் 40 வயதுடையவர்களுக்கு இத்தகைய அடைப்புகள் ஏற்பட்டு முடிவாக மாரடைப்பு ஏற்படுகிறது. இதனிடையே, இத்தகைய பாதிப்புகள் கடந்த 200 ஆண்டுகளாக சிறியவர்களுக்கு அதிகமாக காணப்படுகின்றன.

இவ்வாறு குறைவான வயதில் மாரடைப்பு வருவதற்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், கட்டுப்பாடற்ற ரத்த கொதிப்பு, குறைவான உடல் இயக்கம், அதிக உடல் எடை உள்ளவர்களை சிறிய வயதில் இந்த பாதிப்பு தாக்குகிறது. இதயக்குழாய் அடைப்பு 70 முதல் 80 சதவீதம் அளவிற்கு இருப்பது முக்கியம் ஆகும்.

அறிகுறிகள்: இதயத்தின் மீது அவ்வப்போது வலியுடனான அழுத்தம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் யானையின் கால்களை தூக்கி நமது மார்பு மீது வைப்பதாகவும் இருக்கும் என கூறுகிறார், மருத்துவர் அசோக் குமார்.

மேலும், வாய் தாடை முதல் தொப்புள் வரையில் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். அது மட்டுமல்லாமல், மூச்சு வாங்குதலும், திடீரென அதிகமாக வியர்த்து கொட்டுவதும் ஏற்படும். சிலருக்கு இந்த மாதிரியான நேரங்களில் உடனடியாக ஏதும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தால் தற்காலிகமாக இப்பிரச்னை சரியாக வாய்ப்புள்ளது. குறிப்பாக, எந்த வேலையும் செய்யாமலிருக்கும் போதும் கூட இந்த மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டால், இவை மாராடைப்புக்கான அறிகுறியாகும். மிகவும் அரிதாக எவ்விதமான அறிகுறியும் இல்லாமலும் இந்த மாரடைப்பு ஏற்படலாம்.

சிகிச்சை: ஆஞ்சியோகிராம் என்ற சோதனையில் கை அல்லது கால்களில் ஒரு ஊசி மூலம் சிறிய நுண் குழாயை செலுத்தி ரத்தக் குழாய்கள் வழியாக இதயத்தை அடையலாம். பின்னர், அதற்குள் இருந்து 'டை' என்ற மருந்து செலுத்தப்படும். இந்த மருந்து இதயக் குழாய்களுக்குள் நுழைந்து, எக்ஸ்-ரே மூலம் நமக்கு எளிமையாக இதயத்திற்குள் உள்ளவற்றை காணலாம்.

மேலும், இதயத்தின் அனைத்து பகுதிகளிலும் எந்த குழாய்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை காண உதவும். இதன் மூலம் எத்தனை இடங்களில் அடைப்புகள் உள்ளதென கண்டுபிடிக்கலாம். முக்கிய இதயக் குழாய்களில் ஏதேனும் சிறு அடைப்புகள் இருப்பின் அதனை பலூன் போன்ற அமைப்பை ஏற்படுத்தி சரி செய்யலாம். இதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) என்று பெயர்.

இதனிடையே, மிகவும் முக்கியமான அனைத்து இதயக் குழாய்களையும் ஒன்றிணைக்கிற குழாய்கள் போன்ற பகுதிகளில் இத்தகைய அடைப்புகள் இருக்கும் பட்சத்தில், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு (Byepass treatment) பரிந்துரைக்கப்படும். சில நேரங்களில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய முடியாத நேரத்தில், தேவையை கருதி இந்த சிகிச்சை செய்யப்படும்.

பைபாஸ் அறுவை சிகிச்சை மார்பு பகுதியில் செய்யக் கூடியதாகும். அப்போது, உடலில் உள்ள பிற ரத்தக் குழாய்களை இதயத்தின் ரத்தக் குழாயுடன் பைபாஸ் போல இணைத்துவிட்டு, பிரச்னை உள்ள அடைப்புகளை அகற்றி இதயக் குழாய்களை சரி செய்யலாம். இந்த மாரடைப்பின் அறிகுறிகள் சாதாரணமாக இருப்பின், மாத்திரைகளிலேயே இதனை கட்டுப்பாடுடன் வைக்க இயலும். பாதிப்புகள் அதிகமாக இருப்பின் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையோ அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சையோ செய்யலாம்.

இதையும் படிங்க: Health news: சிறுநீர்ப் பாதையில் ஏதாவது பிரச்னையா? - கிட்னி பாதிப்பிற்குள்ளாகும் அபாயம்.. ஜாக்கிரதை!

Last Updated :Jun 23, 2023, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.