ETV Bharat / state

விருதுநகரில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி!

author img

By

Published : Mar 6, 2021, 11:49 AM IST

virudunagar news
விருதுநகரில் இரண்டு அரசுப் பேருந்துகள் ஜப்தி

விருதுநகர்: அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தூய்மைப் பணியாளர் உயிரிழந்தது தொடர்பாக உரிய இழப்பீடு வழங்காத காரணத்தால், அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் மடவார்குளத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி முத்து, தூய்மைப் பணியாளராக வேலைபார்த்து வந்துள்ளார். இவர்கள் 2014ஆம் ஆண்டு வன்னியம்பட்டியிலிருந்து மடவார்குளத்திற்கு வாகனத்தில் சென்றனர்.

அப்பொழுது மதுரை அரசுப் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இழப்பீடு வழங்கக் கோரி செந்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி, எட்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை (மார்ச் 1) நிறைவேற்றுதல் மனு தாக்கல்செய்யப்பட்ட நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகம், இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. எனவே வட்டியுடன் சேர்த்து 16 லட்சம், பாதிக்கப்பட்ட செந்திலுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு தராததால் நேற்று (மார்ச் 5) ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தேனி செல்லும் பேருந்து, மதுரை செல்லும் பேருந்து என இரு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு, அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்தவர்களை மற்றொரு அரசுப் பேருந்தில், போக்குவரத்து ஊழியர்கள் மாற்றிவிட்டனர்.

இதையும் படிங்க: வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட கட்டுப்பாடுகள் விதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.