ETV Bharat / state

சதுரகிரி மலைக்கு அத்துமீறி நுழைந்த இருவர் கைது!

author img

By

Published : Jun 7, 2020, 8:51 PM IST

விருதுநகர்: சதுரகிரி மலைக்கு அத்துமீறி நுழைந்த இருவரை வனத்துறையினர் கைது செய்து, நூதன தண்டனை வழங்கினர்.

சதுரகிரி மலைக்கு அத்துமீறி நுழைந்த இருவர்
சதுரகிரி மலைக்கு அத்துமீறி நுழைந்த இருவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். தற்போது இந்த கோயிலானது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பக்தர்கள் செல்ல தடை விதித்து மூடப்பட்டுள்ளது.

சதுரகிரி மலைக்கு அத்துமீறி நுழைந்த இருவர்

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சதுரகிரி மலை காப்பு காட்டில் அத்துமீறி நுழைந்து நீர் கொடிகளை வெட்டி நீர் அருந்தி அதை வீடியோவாக வெளியிட்ட, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த மூளையன் ஆகிய இருவரையும் வன உயிரின காப்பாளர் முகமது சபாப் அறிவுறுத்தலின்படி சாப்டூர் வனச்சரக வனத்துறையினர் கைது செய்து, இருவருக்கும் தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் வனத்திற்குள் அத்துமீறி நுழைய மாட்டோம் என தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கிய வனத்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பைனாகுலர் பார்வையில் சிக்கிய மாஞ்சா நூலில் பட்டம் விட்ட நபர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.