ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் பக்தர்களின்றி நடைபெற்ற ஆடித் தேரோட்டம்

author img

By

Published : Aug 11, 2021, 10:25 AM IST

Updated : Aug 11, 2021, 11:00 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேரை வடம் பிடிக்க, பக்தர்களின்றி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ ஆண்டாள் கோயில்

விருதுநகர்: ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடக்கும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும்.மொத்தம் பத்து நாள்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் கடந்த 7ஆம் தேதி கருடசேவையும், 9ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தளங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுபாடுகள் விதிக்கபட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோயில் விழாக்கள் தடையின்றி நடக்க தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்

அதனடிப்படையில் கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆடிப்பூர விழா இன்று 9ஆம் நாளை எட்டியுள்ளது. வழக்கமாக திரு ஆடி பூரம் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

தற்போது கரோனாவை கட்டுபடுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் வளாகத்திற்கு உள்ளே நடைபெற்ற தங்கத்தேரோட்டம் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருள திருக்கோயில் பட்டர்கள், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா ஆகிய கோஷங்கள் எழுப்பி தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடந்த ஆண்டும் இதேபோல் விதிமுறைகளைப் பின்பற்றி கோயிலுக்குள்ளே பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி: காவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பதில்

Last Updated : Aug 11, 2021, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.