ETV Bharat / state

ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையான பட்டாசுகள்.. ஆனாலும் ரூ.50 கோடி பாதிப்பு - சிவகாசி உற்பத்தியாளர்கள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 1:21 PM IST

தமிழகத்தில் 50 கோடி ரூபாய் வரை குறைந்த பட்டாசு விற்பனை
தமிழகத்தில் 50 கோடி ரூபாய் வரை குறைந்த பட்டாசு விற்பனை

Sivakasi firecrackers sales: தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் அளிக்க காலதாமதம் ஏற்பட்டதால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனையில் 50 கோடி ரூபாய் வரை விற்பனை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு நகரமான சிவகாசியில் இருந்து நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டாசுகள் இந்தியா முழுவதும் உள்ள பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தமிழகத்தில் பட்டாசு விற்பனையானது ரூ.50 கோடி வரை குறைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பட்டாசு உற்பத்தி தொய்வு, பட்டாசு விபத்தில் நடந்த உயிரிழப்பு காரணமாக தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வு போன்ற காரணங்களால் தீபாவளிக்கு முந்தைய ஒரு மாத கால பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு 10 சதவீதமாக குறைந்ததாகக் கூறினர்.

இதையும் படிங்க: 'மதுர குலுங்க குலுங்க..' மதுரை தீபாவளி கொண்டாட்டத்தின் ட்ரோன் வீடியோ காட்சிகள்!

மேலும், தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் அளிக்க காலதாமதம் ஏற்பட்டதால், தமிழக பட்டாசு விற்பனையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் வரை விற்பனை பாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட பட்டாசுகளில், 95 சதவீத பட்டாசுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக அனுப்பப்பட்ட பட்டாசுகள் விற்பனையாகி அதற்குண்டான தொகை தங்கள் கைகளுக்கு வந்தவுடன், மழை காலத்திற்கு ஏற்ப பட்டாசு உற்பத்தியை எதிர்வரும் நாட்களில் துவங்கப் போவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் 100-ஐத் தாண்டிய காற்றின் தரக் குறியீடு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.