பண்டிகை காலங்களில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Oct 16, 2021, 10:20 PM IST

உடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி.

பண்டிகை காலங்களிலும், போக்குவரத்திலும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கல்லூரிப் பணிகளை ஆய்வு செய்தார்

விருதுநகர்: ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியில் முற்கட்டமாக, நடப்பாண்டில் 150 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. கட்டிடப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

2995.32 கோடி ஒதுக்கீடு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவகல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்து 2 ஆயிரத்து 145 கோடி வழங்கியது. மாநில அரசு ஆயிரத்து 850.32 கோடி வழங்கியது. இதில் பணிகள் விரைந்து நடைபெற்று நடப்பாண்டு நீலகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகரில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்றார்.

தேசிய மருத்துவக் குழுமம் ஒப்புதல்

மிகக்குறுகிய காலத்தில் மருத்துவ கல்லூரியை தயார் செய்து தேசிய மருத்துவ குழுமத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு 450 கூடுதல் சீட் பெற்றது பாராட்டுக்கு உரியது என்றார். மீதமுள்ள கல்லூரிகளுக்கு ஒப்புதல் பெற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனை தொடங்க தற்போதே அதற்கான ஆயத்த பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விருதுநகரில் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில்

தீக்காயம் - தனிப்பிரிவு

சிவகாசி அருகில் இருப்பதால் "விருதுநகர் மருத்துவ கல்லூரியில் தீக்காய சிகிச்சைக்கென தனி பிரிவும், தேசிய நெடுஞ்சாலை அருகில் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளதால் புராமகேர் சென்டர் பிரிவு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தடுப்பூசிக்கு தயக்கம் வேண்டாம்

தமிழகத்தில் 65 % தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், முதியவர்கள் தடுப்பூசி போடத் தயக்கம் காட்டுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 4 % பேருக்கு மட்டுமே இறப்புக்கான சாத்திக்கூறு உள்ளது.

மேலும், கரோனாவில் இருந்து நம்மைக் காக்க விழிப்புணர்வு மட்டும் போதாது; நமது பழக்க வழக்கங்களிலும் மாற்றம் வேண்டும் என்றார். பண்டிகை காலங்களிலும், போக்குவரத்திலும், குழுவாக செயல்படும் இடங்களிலும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் கொரோனா விதிவிலக்கு தளர்த்தப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.