ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலம் தாழ்த்தும் தமிழ்நாடு அரசு - முத்தரசன் குற்றச்சாட்டு

author img

By

Published : May 10, 2019, 5:53 PM IST

- முத்தரசன்

விருதுநகர்: அர்த்தமற்ற காரணங்களைக் கூறி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசு காலம்தாழ்த்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் சிபிஐ அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. தருமபுரி தொகுதியில் வாக்குச்சாவடியை கைப்பற்றுவோம் என வேட்பாளர் பேசியதால் எட்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டு, அதை 10 வாக்கு சாவடியாகளாக உயர்த்தி, தற்போது எந்த பிரச்சனையும் இல்லாத வாக்குச் சாவடிகளையும் சேர்த்து 43 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அலுவலர் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்திப்பு

வாக்குப்பெட்டிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது வெளிப்படையாகவே எடுத்துச் சென்றிருக்கலாம். அதை ரகசியமாக தேர்தல் ஆணையம் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அர்த்தமற்ற காரணங்களைக் கூறி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், தமிழ்நாடு அரசு காலம்தாழ்த்தி வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.

Intro:விருதுநகர்
10-05-19

அர்த்தமற்ற காரணங்களை கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்  முத்தரசன் பேட்டி.



Body:விருதுநகர் சிபிஐ அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டட நாளில் இருந்தும் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. தேர்தல் அதிகாரி சத்தியபிரபா சாகூ மீது அனைவரும் நம்பிக்கையோடு இருந்தனர் ஆனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தண்மை கேள்வி குறி ஆகிவிட்டது. பல இடங்களில் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சிதலைவர்களோடு நல்ல தொடர்பில் இருந்தனர் அவர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பணி ஆற்றும் போது வருமான வரித்துறை அதிகாரிகளை எதிர்கட்சிகளை பயமுறுத்தவே பயன்படுத்தினர். தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முன்பு கனிமொழி  அவர்கள் தூத்துக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார் அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் கைப்பற்ற படவில்லை அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்து பிஜேபி வேட்பாளரை வெற்றி பெற வைக்கவே முயற்சிகள் நடைபெற்றன.

அதேபோல கன்னியாகுமரி தொகுதியிலும் பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற வைப்பதற்காகவே வசந்தகுமார் அவர்களுக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்றது அங்கும் எதுவும் கைப்பற்ற படவில்லை மேலும் திட்டமிட்டே 40000 மீனவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. தர்மபுரி தொகுதியில் வாக்குசாவடியை கைப்பற்றுவோம் என வேட்பாளர் பேசியதால் 8 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவு என அறிவிக்பட்டு அதை 10 வாக்கு சாவடியாக உயர்த்தி தற்போது எந்த பிரச்சனையும் இல்லாத 43 வாக்குசாவடிகளுக்கு மறுவாக்கு பதிவு என கூறி அதற்காக 19 ம் தேதியே கையெழுத்திட்டேன் என தேர்தல் அதிகாரி கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவையான வாக்கு பெட்டிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது வெளிப்படையாகவே எடுத்து சென்றிருக்கலாம் ஆனால் இதனை ரகசியமாக செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது வாக்காளர்கள் தங்கள் கடமையை செய்துவிட்டார்கள் ஆனால் ஏதும் மாற்றிவிடுவார்களோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் தனது பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டது எதிர்கட்சிகள் தோல்விபயம் காரணமாக வேண்டு மென்றே தேர்தல் ஆணையத்தின் குறை கூறி வருகின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறுகிறார் முதல்வரின் இந்த பேச்சு ஆளுங்கட்சிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முறையாக நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது ஆகையால் தமிழ்நாட்டிற்கு சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து இடைத்தேர்தலையும் வாக்கு எண்ணிக்கையும் நடத்தவேண்டும். சென்னையில் இருக்கும் வாக்காளர்களுக்கு முழுமையாக பூத்சிலிப் வழங்காததால் பெரும்பாலானோர் வாக்களிக்கவரவில்லை. இது திட்டமிட்டே செய்யபட்டுள்ளது. அதே போல் தாபால் வாக்களிக்கும் அரசு ஊழியர்களின் வாக்கும் முழுமையாக வந்து சேரவில்லை அவர்களுக்கான தபால் வாக்களிக்கும் விண்ணப்பம் சரிவர கிடைக்கவில்லை. என புகார் தெரிவித்துள்ளனர் இதெல்லாம் ஏதோ ஒருவகையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது தேர்தல் சரியாக நடைபெறவில்லை தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை இது முற்றிலும் கண்டிக்கதக்கது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ராஜீவ் குடும்பத்தினரான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியுமே மன்னித்துவிட்டோம் என அறிவித்து விட்டனர் தமிழக சட்டமன்றத்தில் அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு பரிந்ரைக்கு அனுப்பியும் இது வரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் மத்திய அரசுடனும் பிரதமர் மோடியுடனும் நல்லுறவில் உள்ளார் அதை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  அதிமுக 7 பேர் விவகாரத்தில் தொட்டிலையும் ஆட்டுவோம் தொடையும் கிள்ளுவோம் என்பதற்கு ஏற்றார் போல் விடுதலை செய்வதாகவும் அறிவித்துவிட்டு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடிதம் மட்டும் அனுப்புவது ஏற்புடையதல்ல. பேருந்து எரிப்பு சம்பத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதை ஆயுள் தண்டணையாக குறைத்து பின்னர் அமைச்சர்கள் ஒன்று கூடி தீர்மானம் நீறைவேற்றி ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்துவிட்டனர் அதுபோல் ஏன்  அவர்களை விடுதலை செய்யவில்லை. பொறியியல் கட்டணத்தை கூடுதலாக 20000 ரூபாய் உயர்த்தி விட்டனர் ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது பொறியியல் கல்வி கட்டணம் முன்பிருந்தபடியே தொடரவேண்டும் கல்வி கட்டணத்தை உயர்த்தக்கூடாது உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தாமல் நீதிமன்றத்தில் சாதாரண அர்த்தமில்லாத காரணங்களை கூறி உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டனர் மக்களுக்கு குடிநீர் கூட வழங்காமல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் தற்போது ஏதும் செய்ய முடியவில்லை என தப்பித்துக் கொள்கின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை எனக் கூறுவது மிகவும் கேவலமான செயல் இதனால் 5 உயிர்கள் பலியானது கண்டிக்கத்தக்கது இனி இதுபோன்ற சம்பவம் நடைபெற கூடாது என் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.