ETV Bharat / state

விடுபட்ட நான்கு ஒன்றியங்களுக்கு மறைமுகத் தேர்தல்

author img

By

Published : Feb 1, 2020, 10:22 AM IST

local body election result
local body election result

விருதுநகர்: விடுபட்ட நான்கு ஒன்றியங்களுக்கான தலைவர் தேர்தலில் தலா இரண்டு இடங்களை திமுகவும் அதிகமுவும் கைப்பற்றின.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 200 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடந்தன. இதையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வெற்றிபெற்றோர் விவரம் அறிவிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

இதில், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஒன்றியங்களை திமுகவும், விருதுநகர், வெம்பக்கோட்டை ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றின. மேலும், தேர்தலின்போது ஏற்பட்ட கலவரத்தில் டிஎஸ்பி கையில் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக நரிக்குடியிலும், கலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக சாத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

நான்கு ஒன்றியங்களுக்கு மறைமுக தேர்தல்

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், சாத்தூர் ஒன்றியக்குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த நிர்மலா கடற்கரை ராஜும், ராஜபாளையத்தில் திமுகவைச் சேர்ந்த சிங்கராஜ் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

நரிக்குடி ஒன்றியத்தில் திமுகவும் அதிமுகவும் சம எண்ணிக்கையில் இருந்தன. இதில், திமுக சார்பில் காளீஸ்வரியும், அதிமுக சார்பில் பஞ்சவர்ணமும் போட்டியிட்டதில் சம வாக்கு பெற்றதால், குலுக்கல் முறையில் அதிமுகவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் ஒன்றியக்குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

வத்திராயிருப்பில் ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த சிந்து முருகன் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஒருமனதாக அவர் தேர்வுசெய்யப்பட்டார். அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஏழு இடங்களை திமுகவும், நான்கு இடங்களை அதிமுகவும் கைப்பற்றின.

இதையும் படிங்க: இறைச்சி விலை அதிகரிப்பு - வியாபாரிகள் கடையடைப்பு.!

Intro:விருதுநகர்
30-01-2020

விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட 4 ஒன்றியங்களுக்கான தலைவர் தேர்தலில் தலா 2 இடங்களை திமுகவும் அதிகமுவும் கைப்பற்றின.

Tn_vnr_03_local_body_election_result_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 200 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடத்தப்பட்டன. கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வெற்றிபெற்றோர் விவரம் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 11 தேதி நடத்தப்பட்டது. அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஒன்றியங்களை திமுகவும், விருதுநகர் மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றின. மேலும், நரிக்குடியில் தேர்தலின்போது ஏற்பட்ட கலவரத்தில் டிஎஸ்பி கையில் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக நரிக்குடியிலும், கலவரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக சாத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஒன்றியங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடந்தது. இதில், சாத்தூர் ஒன்றியக்குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த நிர்மலா கடற்கரைராஜும், ராஜபாளையத்தில் திமுகவைச் சேர்ந்த சிங்கராஜ் ஆகியோர் வெற்றிபெற்றனர். நரிக்குடி ஒன்றியத்தில் திமுகவும் அதிமுகவும் சம எண்ணிக்கையில் இருந்தன. இதில், திமுக சார்பில் காளீஸ்வரியும், அதிமுக சார்பில் பஞ்சவர்ணமும் போட்டியிட்டதில் சம வாக்கு பெற்றதால், குலுக்கல் முறையில் அதிமுகவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் ஒன்றியக்குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். வத்திராயிருப்பில் ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த சிந்து முருகன் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஒருமனதாக அவர் தேர்வுசெய்யப்பட்டார். அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 7 இடங்களை திமுகவும், 4 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.