ETV Bharat / state

அட்டை மில்லில் தீ விபத்து - 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்பு

author img

By

Published : Feb 1, 2020, 9:34 AM IST

விருதுநகர்: சிவகாசி அருகே அட்டை மில்லில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அணைக்க பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

Fire accident in Card Mill
Fire accident in Card Mill

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேவுள்ள சுக்கிரவாரபட்டி பகுதியில் ரவிச்சந்திரன் என்பவரது அட்டை மில் செயல்பட்டுவருகிறது. இங்கு வெளிநாடுகளிலிருந்து பழைய காகித பேப்பர்கள் பெறப்பட்டு தரம் பிரித்து, புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

ஐந்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் இந்தப் பணிகள் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இன்று மாலை ஒரு இயந்திரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து எரிந்த தீ மளமளவென மில் முழுவதும் பரவியது. இந்தப் பயங்கர தீ விபத்தினால் பணி முடித்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் சேதமாகின. தீயை அணைக்க விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

அட்டை மில்லில் தீ விபத்து

சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்துவரும் இந்த ஆலையில் தீ பற்றியதைப் பார்த்தவுடனேயே அனைத்துத் தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்!

Intro:
விருதுநகர்
31-01-2020

அட்டை மில்லில் தீ விபத்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சி.

Tn_vnr_04_fire_accident_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அட்டை மில்லில் தீ விபத்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சி.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது சுக்கிரவாரபட்டி. இந்தப் பகுதியில் ரவிச்சந்திரன் ( ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ) என்பவரது அட்டை மில் செயல்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து பழைய காகித பேப்பர்களை தரம் பிரித்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும் வழக்கம். ஐந்துக்கு மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாலையில் திடீரென ஒரு இயந்திரத்தில் தீ பற்றி உள்ளது. தொடர்ந்து எரிந்த தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் பணி முடித்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் அதற்குத் தேவையான பல்வேறு பொருட்கள் தீயில் சேதமாகின. விருதுநகர் ,சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த இந்த ஆலையில் தீ எரிவதை உடனே பார்த்து அனைவரும் அனைத்து தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.