ஆட்டுக்குட்டிக்குத் தாயான நாய்: விருதுநகரில் வியப்பு

author img

By

Published : Oct 11, 2021, 6:07 AM IST

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருமலைப்புரம், virudhunagar, aruppukottai, dod feeding milk for goat lambs at aruppukottai in virudhunagar

அருப்புக்கோட்டை அருகே உழவர் ஒருவரின் வீட்டில், பிறந்தவுடன் தாயை இழந்த ஆட்டுக்குட்டிகள் அங்குள்ள நாய் ஒன்றைத் தாயாக பாவித்து, அதனிடம் பால் குடித்துவருகின்றன. இது அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே உள்ள திருமலைபுரத்தைச் சேர்ந்த உழவர் முத்து விஜயன். இவர் தற்பொழுது மழை இல்லாத காரணத்தினால் வேளாண்மை செய்ய முடியாத நிலையில் வீட்டில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்துவருகிறார்.

ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு காட்டிற்குச் செல்லும்பொழுது பாதுகாப்பிற்காகக் கூடவே அழைத்துப் போக ஒரு நாயையும் வளர்த்துவருகிறார். இந்த நாய் இவருக்கு உறுதுணையாகவும் மேய்ச்சலுக்குப் பாதுகாப்பாகவும் இருந்துவருகிறது.

மறுப்புத் தெரிவிக்காத நாய்

விருதுநகரில் ஆட்டுக்குட்டிக்குத் தாயான நாய்

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் வளர்த்த ஆடு, இரண்டு குட்டிகளை ஈன்றுவிட்டு உயிரிழந்தது. இதனால் அந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளும் தாய்ப்பாலின்றி தவித்துவந்தன. அப்போது, பால் இன்றி தவித்த ஆட்டுக்குட்டிகள் இவர் வளர்த்த நாயிடம் பால் குடிக்க முயற்சி செய்தபோது நாயும் மறுப்பின்றி பால் கொடுக்கத் தொடங்கி, நாளடைவில் இதுவே வழக்கமாகவும் மாறியது.

இதைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது. இதனை அந்த ஊர் பொதுமக்கள் மிகவும் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர். தாயின்றித் தவித்த ஆட்டுக்குட்டிகளுக்கு நாய் தாயாக மாறி பால் கொடுத்த அதிசயம் வியக்கத்தக்கதாக இருந்துவருகிறது.

இதையும் படிங்க: 27 புரோட்டா, 1 சிக்கன் ரைஸ் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.