பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவு - அண்ணாமலை

author img

By

Published : Sep 5, 2021, 10:20 PM IST

அண்ணாமலை

பாஜக கட்சி ஆட்சி அமைத்தால் தான், தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விருதுநகர்: சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, "தமிழ்நாடு சட்டப்பேரவை தற்போது பாஜக சார்பில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்களிலிருந்து அடுத்த கட்டமாக 150 சட்டப்பேரவை உறுப்பினர்களாக உயர்வதை இயற்கை முடிவு செய்துவிட்டது, 2026ஆம் ஆண்டுடன் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் இருக்காது.

எதிர்வரும் காலங்களில் அடுத்த கட்ட தலைவர்கள் பாஜக தவிர வேறெந்த கட்சிகளிலும் இருக்க மாட்டார்கள். மத்திய அரசின் மூலமாகத் தமிழ்நாடு விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

2026ஆம் ஆண்டில் பாஜக கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இதன் மூலமாக பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

சிவகாசி பட்டாசு தொழில் பிரச்னை குறித்து மக்களவையில் எடுத்துரைக்க, விருதுநகர் தொகுதி பாஜகவைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் 70 ஆண்டுக்கால தமிழ்நாட்டு மக்களின் துன்பம் எல்லாம் விலகும்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த அவர் வருகிற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவைப் பரிசீலனை செய்து கரோனா காலகட்டம் என்பதால் கொண்டாட்டத்தை வரைமுறை செய்ய முன்வரவேண்டும். பாஜக அனைத்து மதித்தவருக்கும் குரல் கொடுக்கின்ற கட்சியாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்குத் தடை ஏற்பட்டால் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூன்று தினங்கள், பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் அதாவது அவரவர் வீடுகளில் வாசலில் விநாயகர் சிலை வைத்து வழிபடப் போவதாகவும் சீனப் பட்டாசுக்குத் தடை விதித்தது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

ஒன்றிய பாஜக தான் எனவும், சிவகாசி தொழில்களின் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன்களிலும் மத்திய அரசு என்றென்றும் துணை நிற்கும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் எனப் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.