ETV Bharat / state

'அடுத்த முதல்வர் விஜய்' சுவரொட்டியால் பரபரப்பு!

author img

By

Published : Jun 22, 2021, 8:14 PM IST

நடிகர் விஜய் சுவரொட்டிகள்
நடிகர் விஜய் சுவரொட்டிகள்

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் 'அடுத்த முதல்வர் விஜய்' என்று எம்ஜிஆர் படத்துடன் சுவரொட்டிகள் மற்றும் பல்வேறு வசனங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தெருவெங்கும் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் படத்துடன் விஜய் படத்தினை சேர்த்து 'அடுத்த முதல்வர் விஜய்' என்று வாசகங்களுடன் 'தமிழ்நாட்டின் மாற்றமே மாஸ்டர் வருக வெல்க' என்றும் 'நாளை 234 தொகுதிகளிலும் முதல்வர் எங்கள் விஜய்' என்றும் 'இன்று உங்கள் அண்ணாவின் ஆட்சி 2026 எங்கள் அண்ணாவின் ஆட்சி' என்றும் '1977ல் மக்கள் திலகம் கண்ட அருப்புக்கோட்டை 2026ல் மக்கள் தலைவர் காணும் அருப்புக்கோட்டை' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் முக்கிய சாலை சந்திப்புகளிலும், தெருக்களிலும், வீதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

விஜய் ரசிகர்களின் சுவரொட்டி விளையாட்டுகள்

ஏற்கனவே விஜய் மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றனர். இது அரசியலுக்குள் நுழைந்து முன்னோட்டம் என்கின்ற கருத்து நிலவிவருகிறது. இதனையடுத்து விஜய் அரசியலில் ஈடுபட உள்ளாரா? இல்லையா? என்பது குறித்து சர்ச்சை கருத்துக்கள் நிலவிவரும் சூழ்நிலையில், இதுபோன்ற 'அடுத்த முதல்வர் விஜய்' என்று முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் படத்துடன் விஜய் ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'எங்கள் கவலைகளின் தடுப்பூசியே' - பிறந்தநாள் போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.