ETV Bharat / state

வீட்டில் இருந்த பெண் எரித்துக் கொலை! போலீஸார் விசாரணை

author img

By

Published : Dec 7, 2019, 10:36 PM IST

murder
murder

விழுப்புரம்: வீட்டில் தனியாக இருந்த பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் கரிகாலன் தெரு பகுதியில் வசித்துவருபவர் நடராஜன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். இவருடைய மனைவி இந்திரா (56). இந்திரா தன்னுடைய சொந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்தார்.

இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடராஜன் வெளியூர் சென்றுவிட்டு இன்று வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பெண் எரித்துக்கொலை

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இந்திரா ரத்தவெள்ளத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து நடராஜன் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான காவல் துறையினர், கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்டுள்ள இந்திரா பலரிடம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால், பணம் கொடுக்கல்-வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட இந்திராவின் கணவர் நடராஜன் மீதும் காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடமும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வாழ்க்கையில் சாதிக்க பாலினம் தடையில்லை: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி!

Intro:விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Body:விழுப்புரம், சுதாகர் நகர் கரிகாலன் தெரு பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி இந்திரா (56).

இந்திரா தன்னுடைய சொந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்தார். மேலும் இந்திரா அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நடராஜன் வெளியூர் சென்றுவிட்டு இன்று வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஹாலில் இந்திரா ரத்தவெள்ளத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனைத்தொடர்ந்து நடராஜன் போலீஸாருக்கு கிடைத்த கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீஸார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்டுள்ள இந்திரா பலரிடம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால், பணம் கொடுக்கல்-வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொள்ளை அடிக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Conclusion:மேலும் கொலை செய்யப்பட்ட இந்திராவின் கணவர் நடராஜன் மீதும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் நகைக்காக பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

( இந்த செய்திகான வீடியோ மெயிலில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.