ETV Bharat / state

ஒதுக்கிவைக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளி - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 19, 2020, 7:03 AM IST

untouchable issue protest in viluppuram
untouchable issue protest in viluppuram

உழக்குடி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தும் பணி செய்ததால் ஆதிக்க சாதியினரால் ராஜா என்கிற முடிதிருத்தும் தொழிலாளியின் குடும்பத்தை ஊர் ஒதுக்கிவைத்ததைக் கண்டித்து முடிதிருத்துவோர் நல சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்: சாதிய வன்கொடுமை காரணமாக ஊர் விலக்கம் செய்யப்பட்ட முடி திருத்தும் தொழிலாளிக்கு நீதி வேண்டி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் உழக்குடி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தும் பணி செய்ததால், ஆதிக்கச் சாதியினரால் ராஜா என்கிற முடிதிருத்தும் தொழிலாளியின் குடும்பத்தை ஊர் விலக்கம் செய்ததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், இதற்கு அரசும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் முடிதிருத்துவோர் நல சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் பங்கேற்று ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த மேல் சாதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சியில் முடி திருத்தும் பணிகள் செய்பவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, நடந்த சம்பவத்தைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.