ETV Bharat / state

மரக்காணத்தில் தொடர் மழை: உப்பளம் உற்பத்தி நிறுத்தி வைப்பு

author img

By

Published : Nov 2, 2022, 4:48 PM IST

உப்பளம் உற்பத்தி நிறுத்தி வைப்பு
உப்பளம் உற்பத்தி நிறுத்தி வைப்பு

தொடர் மழை காரணமாக மரக்காணத்தில் உப்பளம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

வங்காள விரிகுடா பகுதியான மரக்காணத்தில் சுமார் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் வானிலை மையம் அறிவித்தபடி மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதலே விடாமல் கனமழை பெய்து வருகிறது.

உப்பளம் உற்பத்தி நிறுத்தி வைப்பு

இந்த மழை காரணமாக மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 60 கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகமாக வருகிறது. கனமழை கொட்டி வருவதால் விவசாய நிலங்களில் மழைநீர் கடல் போல் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டின் மூன்றாவது உப்பு உற்பத்தி செய்யப்படும் மரக்காணத்தில் 3,500 ஏக்கர் உப்பளம் காலையில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கியது. இதனால் உப்பளம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இந்த உப்பளத்தை நம்பி இருக்கும் 5,000 தொழிலாளர்கள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு, ஆலத்தூர், பிரம்மதேசம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட 60 கிராமங்களில் மழையின் தாக்கம் தொடர்ந்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.