ETV Bharat / state

Villupuram:விழுப்புரத்தில் தலைவிரித்தாடும் மணல் கொள்ளை; கண்டித்த சமூக ஆர்வலர் மீது கொலைவெறி தாக்குதல் - அரசு கண்டுகொள்ளுமா?

author img

By

Published : Jun 12, 2023, 8:50 PM IST

Updated : Jun 12, 2023, 9:42 PM IST

risk-of-damage-to-bridges-anbumani-ramadoss-urges-immediate-closure-of-quarries
போக்குவரத்து பாலங்கள் சேதமடையும் அபாயம்: குவாரிகளை உடனே மூட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தென்பெண்ணை ஆற்றின் சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலரை கொலைவெறி தாக்குதல்; உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

விழுப்புரம்: மணல் அரிப்பு காரணமாக, விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் வாகன போக்குவரத்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து பாலங்கள் ஆகியவற்றின் தூண்களின் அடித்தளங்கள் கடுமையாக அரிக்கப்பட்டு வருகின்றது. தென்பெண்ணையாற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் மணல்மட்டம் குறைந்து பாலங்களின் தூண்களுக்கு கீழ் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் மணல்மட்டம் குறைந்ததன் காரணமாக, பாலங்களின் தூண்களின் கீழ் பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள இரு பாலங்களின் தூண்களும் மணல்மட்டத்திற்கு கீழே 8 மீட்டர் ஆழத்திற்கு அமைக்கப்பட்டிருப்பதால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று பொதுப்பணித்துறை சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இப்போதே தூண்களைச் சுற்றிலும் 4 மீட்டர் ஆழத்திற்கு மணல் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மணல் கொள்ளை கட்டுப்படுத்தாவிடில், இன்னும் சில மாதங்களில் தூண்களின் அடிப்பகுதி வரை மணல் அரிப்பு ஏற்பட்டு விடக்கூடும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இந்த பாலத்தின் உறுதி தன்மையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மற்றொருபுறம் மணல்மட்டம் குறைந்ததால் ஆற்று நீர் கால்வாய்களில் பாய முடியாத நிலையால் பாசனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “மணல் அரிப்பின் காரணமாக பாலங்களின் அடித்தளம் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும் பிடாகம் பகுதியில் பாலத்தின் தூண்களுக்கு கீழ் கடுமையான மணல் அரிப்பு ஏற்பட்டது. அதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தூண்களின் அடித்தளங்களைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. ஆனால், அடுத்த சில வாரங்களில் மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் தூண்களுக்கு கீழ் மணலரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. மணல் குவாரிகள் தான் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம் என்று தெரிந்தும் அவற்றை மூட மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

  • தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையால் அரிக்கப்படும் போக்குவரத்து மற்றும் தொடர்வண்டி பாலங்களின் அடித்தளங்கள்; ஆற்றையும் கட்டுமானங்களையும் காக்க மணல்குவாரிகளை மூட வேண்டும்!

    விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் பல இடங்களில் சட்டப்படியாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையால் ஏற்பட்ட பாதிப்புகள் போதாது என்று ஏனாதிமங்களம் என்ற இடத்தில் புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அண்மையில் அனுமதி கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் அண்மையில் அமைக்கப்பட்ட 25 புதிய மணல் குவாரிகளில் தென்பெண்ணை ஆற்றில் ஏனாதிமங்களத்தில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரி தான் மிகவும் பெரியதாகும். அந்த மணல் குவாரியில் மட்டும் ஒரு லட்சம் யூனிட் மணல் அள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 6 மணல் குவாரிகள் அள்ளப்படும் ஒட்டுமொத்த மணலை விட அதிகமாகும்.

மணல் குவாரிகளில் அதிக அளவாக 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், விதிகளை மீறி தென்பெண்ணை, பாலாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் 30 அடி அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டால் பாலங்களின் அடித்தளத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது. அதைத் தடுக்க தென்பெண்ணை ஆற்றில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், இதனை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலர் ராஜாவை நேற்று இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து ராஜா முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நடந்த சம்பவத்தை காவல்துறை வாக்குமூலம் பெற்ற போது, விபத்து என்று சொல்லுமாறு சிலர் வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.

மணல் அள்ளுவதற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் மணல் கொள்ளையர்கள் ராஜாவை தாக்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் யாரும் கைது செய்யப்படாத நிலையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறை கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட ராஜாவும் அர்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் மாவட்டத்திற்கு புது எஸ்.பி... வந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா?

Last Updated :Jun 12, 2023, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.