விவசாயிகளிடம் கடனை வசூலிக்க ரிலையன்ஸ் பெண் ஊழியர் தரக்குறைவான பேச்சு!

author img

By

Published : Jan 5, 2022, 9:29 PM IST

விவசாயிகளிடம் கடனை வசூலிக்க ரிலையன்ஸ் ஊழியர் தரக்குறைவான பேச்சு

விவசாயி நான் கடன் பெற்றது இந்தியன் வங்கியில், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டபோது விவசாயியைத் தரக்குறைவாக அந்த எதிர்முனையிலிருந்த பெண் பேசிய ஆடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி ரகோத்தமன். இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருவெண்ணெய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் ரூபாய் 30 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

விவசாயி ரகோத்தமன் கடனை அடைக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜனவரி.3) காலை அவருக்கு ஒரு தொலைபேசி வந்துள்ளது. அந்த தொலைபேசியில் எதிர் முனையில் ஒரு பெண் பேசியுள்ளார். பேசும் அந்தப் பெண் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றும், தாங்கள் இந்தியன் வங்கியில் பெற்ற கடனை ஏன் செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு விவசாயி நான் கடன் பெற்றது இந்தியன் வங்கியில், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டபோது விவசாயியைத் தரக்குறைவாக அந்த எதிர்முனையிலிருந்த பெண் பேசிய ஆடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி இந்தியன் வங்கியில் கேட்டபோது, கடந்த 6 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனம் தான் வாராக் கடன்களை வசூலிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

விவசாயி ரகோத்தமன்
விவசாயி ரகோத்தமன்

மேலும், ரிலையன்ஸ் நிறுவனம்போல 6 நிறுவனங்களுக்குக் கடன் வசூலிக்கும் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு 10 லட்சம் வாராக்கடன் வங்கியில் இருக்கும் போது, அந்த நிறுவனங்கள் இரண்டு லட்சம் ரூபாய் வங்கியிடம் செலுத்தி விட்டு, மீதித் தொகையைக் கடன் பெற்றவரிடம் வசூலிப்பார்கள்.

தற்போது விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் அசட் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி என்கிற ரிலையன்ஸ் பிரிவுதான் வசூல் செய்வதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Governor Speech: ஆளுநர் உரை: ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு, அதிமுக, விசிக வெளிநடப்பு...

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.