ETV Bharat / state

டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு பணம் மதுபானங்கள் திருட்டு!

author img

By

Published : Nov 13, 2019, 1:49 PM IST

tasmac theft

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டு, சுவற்றை உடைத்து மர்ம நபர்கள் பணம், மதுபான பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தபேட்டை அருகே கணகனந்தல் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் (கடை எண் 11446, 11656) செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்றிரவு பணியை முடித்து மதுபானக் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் செல்லும் வரை கடையை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சிதைத்து, கடை எண் 11446ல் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் மதுபானங்களை திருடியதாகத் தெரிகிறது. அதேபோன்று, பின் பக்கமுள்ள மற்றுமொரு கடையின் சுவற்றில் துளையிட்டு உடைத்து அதிலிருந்த பணத்தையும், மதுபானங்களையும் திருடி சென்றுள்ளனர்.

மேலும், கொள்ளையர்கள், கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமரா, ரெக்கார்டர், மானிட்டர் போன்ற கருவிகளையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. டாஸ்மாக் கடையின் அருகில் இருந்த பெட்டிகடைகளை உடைத்து பணத்தையும் திருடி சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் மதுபானக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையறிந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடை விற்பனை, மேற்பார்வையாளர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் கொள்ளை போன பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

திருட்டு நடந்த மதுபான கடையை பார்வையிடும் போலீசார்

மேலும், நேற்றிரவு கணக்கு முடித்து விட்டு பணத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றதால் பெரிய அளவில் கொள்ளை போகவில்லை எனவும், சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பணம் ஆகியவை கொள்ளை போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டு மற்றும் சுவற்றை உடைத்து மர்ம நபர்கள் மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.Body:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தபேட்டை அருகே கணகனந்தல் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் (கடை எண் 11446, 11656) செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வழக்கம் போல பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு, பின்னர் கடை எண் 11446ன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அந்த கடையில் வைத்திருந்த பணம் மற்றும் மதுபானங்களை திருடியதாக தெரிகிறது.

பின்னர், பின் பக்கமுள்ள மற்றுமொரு கடையையும் சுவற்றில் துளையிட்டு உடைத்து அந்த கடையிலிருந்து பணத்தையும், மதுபானங்களையும் திருடி சென்றுள்ளனர்.

மேலும் கொள்ளையர்கள், கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமரா ரெக்கார்டர் மற்றும் மானிட்டர் போன்ற கருவிகளையும் திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் டாஸ்மாக் கடையின் அருகில் இருந்த பெட்டிகடைகளையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை அறிந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பின்னர் அங்கு வந்த போலீசார், கடை விற்பனை மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் கொள்ளை போன பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Conclusion:நேற்று இரவு கணக்கு முடித்து விட்டு பணத்தை வீட்டிற்கு எடுத்து சென்று விட்டதால் பெரிய அளவில் கொள்ளை போகவில்லை எனவும், சுமார் 20 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பணம் ஆகியவை கொள்ளை போயிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

(இந்த செய்திக்கான வீடியோ மெயிலில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.