ETV Bharat / state

ரஜினியின் முடிவு துணிச்சலானது! - ரவிக்குமார் எம்.பி.

author img

By

Published : Dec 29, 2020, 6:11 PM IST

விழுப்புரம்: அரசியலுக்கு வர நிர்பந்தப்படுத்தியவர்களையும் மீறி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று ரஜினி அறிவித்திருப்பது மிகவும் துணிச்சலான முடிவு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ravikumar
ravikumar

உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கும் நிலையில், பலரும் அவரது இந்த முடிவை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் நாம் கேட்டபோது, "அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவித்திருப்பது மிகவும் துணிச்சலான அறிவிப்பாகும்.

ஏனென்றால் அவரை அரசியல் கட்சி ஆரம்பிக்க நிர்பந்தம் செய்தவர்கள், இந்தியாவின் மிக உயர்ந்த அதிகார அமைப்பில் இருப்பவர்கள். அவர்களின் நிர்பந்தத்திற்கு பணியாமல் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது அவரது துணிச்சலையே காட்டுகிறது.

ரஜினியின் முடிவு துணிச்சலானது! - ரவிக்குமார் எம்.பி.

மேலும், இந்த முடிவு அவரது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல், தமிழக அரசியல் நலத்திற்கும் நன்மை பயக்கக்கூடியது. அவர் நலமாக நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும் ” என்று கூறினார்.

இதையும் படிங்க: உடல்நலனை கருத்திற்கொண்டு ரஜினி அரசியலுக்கு வராததை வரவேற்கிறேன் - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.