தமிழ்நாட்டில் ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு புது உத்தரவு

author img

By

Published : Dec 12, 2021, 4:33 PM IST

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை செயலாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட பலர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது.

சென்னை இன்று (டிச .12) , தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் பங்கெடுத்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒமைக்ரான் தொற்று வரும் முன் தற்காத்துக்கொள்ளும் விதமாக எடுக்க இருக்கும் செயல்கள் குறித்து ஆலோசித்தனர்.

காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தடுப்பூசிப் பாணிகளும், தற்காப்புப் பணிகளும் தீவிரம்:

தமிழ்நாட்டில் முதலில் தகுதியுடையோருக்கான தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவ கட்டமைப்புகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல், பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுமாயின் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் உடனடியாக வழங்கவும், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மரபணு பகுப்பாய்வு கட்டாயம்

அவர்களுடன் பயணம் செய்யும் சகப் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், பாதிப்பு இருந்தால் அவர்களை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்து, அதைச் சோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்த நடைமுறைத் தொடர்ந்து பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும்; ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் அதிகரித்து தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்று கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Rajni Fan Boy: ரஜினியை நெஞ்சில் சுமக்கும் ஹர்பஜன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.