ETV Bharat / state

'நான் நினைத்தால் சசிகலா ஒழிக என ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவார்கள்' - சி.வி.சண்முகம்

author img

By

Published : Jan 31, 2021, 5:16 PM IST

Updated : Jan 31, 2021, 6:44 PM IST

சிவி சண்முகம்
சிவி சண்முகம்

விழுப்புரம்: நான் நினைத்தால் நாளைக்கே சசிகலா ஒழிக என ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஜன.31) நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1,666 மையங்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார். இதையடுத்து திருவக்கரை பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் பழைமை வாய்ந்த தொன்மையான கல்மர படிகங்களை பாதுகாக்கும் வகையில், 123 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புவியியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் பூமி பூஜையை அமைச்சர் சிவி சண்முகம் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் ஆகி வெளிவரும் நிலையில், விழுப்புரத்தில் அதிமுகவின் 'நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா' என போஸ்டர் அடித்து ஒட்டபட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா! நான் நினைத்தால் நாளைக்கே சசிகலா ஒழிக என ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவார்கள்" என்று கூறினார்.

மேலும், 7 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் காலவரையறை கெடு கொடுத்துள்ளதாகவும், 7 பேர் விடுதலை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் முதலமைச்சர் நேரில் சந்தித்து விரைவில் விடுதலை செய்ய கோரிக்கை வைப்பார் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்: குழப்பத்தில் மக்கள்

Last Updated :Jan 31, 2021, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.