ETV Bharat / state

எல்லீஸ்சத்திரம் தடுப்பணை கரையோரங்களில் மண் அரிப்பு - அமைச்சர் பொன்முடி ஆய்வு

author img

By

Published : Aug 31, 2022, 5:55 PM IST

Etv Bharatஎல்லீஸ் தடுப்பணை  கரையோரங்களி மண் அரிப்பு - அமைச்சர் பொன்முடி ஆய்வு
Etv Bharatஎல்லீஸ் தடுப்பணை கரையோரங்களி மண் அரிப்பு - அமைச்சர் பொன்முடி ஆய்வு

ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் உள்ள எல்லீஸ் சத்திரம் தடுப்பணை அருகே கரை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டதை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஆகஸ்ட் 31)காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கர்நாடகப்பகுதியில் இருந்து பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் உள்ள எல்லீஸ்சத்திரம் தடுப்பணை அருகில் உள்ள வலது புற கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் விழுப்புரம் ஏனாதிமங்கலம் பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பின், அந்தப் பகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார்.

அதனைத்தடுக்கும் வகையில் உடனடியாக கருங்கற்களைக்கொண்டு தடுப்பு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பொன்முடி, ‘இங்கே தடுப்பணை அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். திட்டமிட்டு முறையாக இந்த இடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரி செய்யப்படும்' எனவும் தெரிவித்தார்.

எல்லீஸ்சத்திரம் தடுப்பணை கரையோரங்களில் மண் அரிப்பு - அமைச்சர் பொன்முடி ஆய்வு

தடுப்பணை கதவுகளை உடைக்க உத்தரவிட்ட ஆட்சியர்: எல்லீஸ்சத்திரம் தடுப்பணை உடைந்து ஓராண்டாகியும் 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் தடுப்பணையை இதுவரை மாவட்ட நிர்வாகமும், பொது பணித்துறை அலுவலர்கள் கட்டவில்லை.

இந்நிலையில் இன்று அதன் தடுப்பணை இரும்பு கதவுகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் 100 ஏக்கருக்கும் மிகாமல் விவசாய பயிர் நிலங்கள் நீரில் மூழ்கின.

இதையும் படிங்க:பழங்குடியின வேலைக்காரப்பெண்ணை கொடூரமாக தாக்கிய பாஜக பெண் பிரமுகர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.