பொங்கல் திருநாள்! தமிழர் திருநாள் வாழ்க! வாழ்க! - அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Jan 15, 2023, 1:10 PM IST

பொங்கல் திருநாள்! தமிழர் திருநாள் வாழ்க! வாழ்க! - அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் தைத்திருநாளில் பொங்கல் வைத்து கொண்டாடிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ் வாழ்க, தைப் பொங்கல் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்று முழக்கமிட்டார்.

பொங்கல் திருநாள்! தமிழர் திருநாள் வாழ்க! வாழ்க! - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவருடைய துணைவியாருடன் திமுக தொண்டர்கள் சமத்துவப்பொங்கல் வைத்து கொண்டாடினர். அப்போது, 'பொங்கலோ... பொங்கல்' என்றும்; தமிழ்ப் புத்தாண்டு வாழ்க என்றும்; தைப்பொங்கல் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்றும் முழக்கமிட்டு கொண்டாடினர்.

அப்போது இந்த நிகழ்வில் திமுக மாவட்ட கழக செயலாளரும் விக்கிரவாண்டி, சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகாமணி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், அன்னியூர் சிவா ஜனகராஜ் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திமுக மாவட்ட, நகர, பேரூராட்சி ஊராட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவும், தைப் பொங்கலை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அவர் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவும், எப்போதும் இல்லாத வகையில், இப்போது தமிழ்நாடு முழுவதும் தைப்பொங்கல் பண்டிகை மிகவும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை தைப் பொங்கலை மிகச் சிறப்பாக கொண்டாட, திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் தமிழ்நாடு வாழ்க என்று இல்லந்தோறும் கோலங்கள் போடப்பட்டுள்ளன. அதற்குப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

தை மாதம் முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து, இன்றைக்கு எல்லா மதத்தினரும் தமிழர்கள் என்ற உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்பதுதான், முதலமைச்சருடைய எண்ணம். அந்த எண்ணம் இன்றைக்கு ஈடேறி இருக்கிறது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை, உலகத் தமிழர்கள் இன்றைக்கு மிகச் சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடி வருகின்றனர். தமிழ் வாழ்க! தைப்பொங்கல் வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறேன்" என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: Pongal celebrations: 65 ஆண்டுகள் கடந்தும் சமத்துவப் பொங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.