ETV Bharat / state

'அரசு மதுபான கடைகளில் கள்ளச்சாராயம்போல, கலர் சாராயம் விற்பனை' - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

author img

By

Published : Jun 4, 2023, 11:05 PM IST

Etv Bharat
Etv Bharat

கள்ளச்சாராயம் விற்பது போல அரசு மதுபான கடைகளில் கலர் கலந்து கலர் சாராயம் (போலி மதுபானம்) விற்கப்படுகிறது. அரசு விழித்துக்கொள்ள வேண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அரசு மதுபானக் கடைகளில் கள்ளச்சாராயம் போல கலர் சாராயம் விற்பனை

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று (ஜூன் 4) செய்தியாளர்களுக்கு சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் ஆறாக ஓடுவதாக குற்றம் சாட்டினார். சமீபத்தில் கூட விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 24 பேர் உயிரிழந்ததாக கூறிய அவர், கள்ளச்சாராயம் விற்பதுபோல, அரசு மதுபான கடைகளில் கலர் கலந்து 'கலர் சாராயம்' (போலி மதுபானம்) விற்கப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். எனவே, தமிழக அரசு விழித்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டில் நேற்று (ஜூன் 03) டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திய கோயில் பூசாரி, அவரது நண்பர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக கோயில் பூசாரி உயிரிழந்ததாக, இன்று செய்தி வெளிவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அப்பாவின் மதுப்பழக்கத்தால் மகள் தற்கொலை.. உருக்கமான கடிதம்!

மேலும், விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்துக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் வழிபட சென்றால் அங்கு 'சாதி கலவரம்' வெடிக்கும் என்று நான் கூறியதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சிந்தனைச்செல்வன் எனது பேட்டியை முழுமையாகப் பார்த்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. பார்த்து இருந்தால் இப்படி அவர் சொல்லி இருக்க மாட்டார். யாரோ சொன்னதை வைத்து தான் அப்படி அவர் சொன்னாரா? என்பதும் தெரியவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, முட்டுக் கொடுப்பதற்காக, நான் சொல்லாததை சொன்னதாக சிந்தனைச்செல்வன் கூறியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் பலரது உயிரை காப்பாற்றிய தஞ்சாவூர் வெங்கடேஷ்.. சம்பவத்தை விளக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.