ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கைதானவர்களின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

author img

By

Published : Jul 29, 2022, 2:04 PM IST

Updated : Jul 29, 2022, 2:11 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கைதானவர்களின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கைதானவர்களின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர் உட்பட ஐந்து பேர் ஜாமீன் கேட்டு நேற்று (ஜூலை 28) விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சாந்தி முன்னிலையில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.

அப்போது நீதிபதி, "சின்னசேலம் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் ஜாமீன் கேட்கிறீர்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர்கள் எந்தெந்த பிரிவுகளில் தகவலறிக்கை பதிந்திருப்பார்கள் என்பது தெரியாது. ஆகவே சிபிசிஐடி பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்து ஜாமீன் கோரலாம்.

இதனால் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்கு இந்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது. அந்த நாளன்று சிபிசிஐடி பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு சிபிசிஐடி தரப்பு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு, பள்ளி நிர்வாகி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்பபெற உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் ; கைதான 5 பேர் ஜாமீன் கோரி மனு!

Last Updated :Jul 29, 2022, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.