பூர்வீக கிராமத்தில் தொழிற்சாலை தொடங்கிய பட்டதாரி இளைஞர்

author img

By

Published : Sep 18, 2022, 7:53 PM IST

Etv Bharatபூர்விக கிராமத்தில் தொழிற்சாலை தொடங்கிய பட்டதாரி இளைஞர்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் அவரது பூர்வீக கிராமத்தில் தொழிற்சாலையைத் தொடங்கி படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்.

விழுப்புரம்:தனது சொந்தக் கிராமத்தில் உள்ள பட்டதாரிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் ஓங்கும் வகையில், தனது பூர்வீக கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், ஆரியூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர், இளவரசன். இவர் நாட்டின் தலைநகரான டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்து வந்துள்ளார்.

இதில் அவர் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தனது சொந்த கிராமமான ஆரியூர் கிராமத்தில் தன்னைப் போன்று படித்து வேலை இல்லாமல் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என எண்ணினார். இதற்காக கிராமத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற சிறந்த எண்ணத்தில், தனது சொந்த கிராமத்தில் தனக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் சாம்சங் உள்ளிட்ட முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

மொபைல் நிறுவனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
மொபைல் நிறுவனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

இந்த தொழிற்சாலையின் மூலம் இந்தப் பகுதியில் படித்து வேலையில்லாமல் உள்ள பட்டதாரி மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித்தர முன் வந்துள்ளார்.

பூர்வீக கிராமத்தில் தொழிற்சாலை தொடங்கிய பட்டதாரி இளைஞர்
இதன் மூலம் இந்தப் பகுதி மட்டுமின்றி இதனைச்சுற்றியுள்ள பகுதியில் உள்ள படித்த பட்டதாரி மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் வேலைவாய்ப்பைப் பெற்று தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்த தொழிற்சாலை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனவும்; இந்தப் பகுதி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொழிற்சாலை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பொன்முடி அவர்கள் ரிப்பன் வெட்டி, இந்த தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தார். இவருடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்ட இந்தப் பகுதி கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மத்திய, மாநில அரசின் முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்... இதோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.