ETV Bharat / state

"ஓடிப்போன கான்ட்ராக்டருக்கு நான் என்ன செய்ய முடியும்" - அமைச்சர் கே.என்.நேரு பகீர்

author img

By

Published : Apr 24, 2023, 5:13 PM IST

Updated : Apr 24, 2023, 5:41 PM IST

Etv Bharat
Etv Bharat

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 91% பணிகள் நிறைவேறிய நிலையில், இதுவரையில் வேலூருக்கு 963 கோடி ரூபாயில் 114 பணிகளில் 91 பணிகள் முடிவடைந்ததாகவும், மேலும் பல பணிகளுக்காக 314 கோடி ரூபாய் நிதி அளிக்க உள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். மேலும், அம்ரூத் திட்டத்தில் குழாய்கள் அமைத்த ஒப்பந்ததாரர் ஓடிப்போனதிற்கு நான் என்ன செய்ய முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஓடிப்போன கான்ட்ராக்டருக்கு நான் என்ன செய்ய முடியும்" - அமைச்சர் கே.என்.நேரு பகீர்

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று (ஏப்.24) நடைபெற்றது. இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, 'மாநகராட்சியில் என்னென்ன பணிகள் நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்தபோது, பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் அதற்கு உரிய நிதியை வழங்கி முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் மே 15ஆம் தேதிக்குள் நீர் வழங்குவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளதாகவும், சாலைகளுக்கும் நிதி ஒதுக்க அறிவுறுத்தியதோடு, மின் விளக்குகளுக்கும் நிதி ஒதுக்கப்பட உள்ளது.

மேலும், 250 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு அளிக்க உள்ளோம். 15ஆவது நிதிக்குழுவில் 70 கோடி ரூபாய் அளிக்கவுள்ளோம். மூலதன மானிய திட்டத்தில் 25 கோடி ரூபாய் நிதி என மொத்தமாக 314 கோடி ரூபாய் அளிக்க உள்ளோம்'' என அவர் தெரிவித்துள்ளார்.

முறையாக வரி வசூல் செய்வது, குப்பைகளை கொட்டுவதற்கான இடம் ஒதுக்கி தருவதாக மாவட்ட ஆட்சியரும் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 91% பணிகள் நிறைவேறிய நிலையில், இதுவரையில் வேலூருக்கு 963 கோடியில் 114 பணிகளில் 91 பணிகள் முடிவடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

29 கிலோ மீட்டர் தூர அளவுக்கு பாதாள சாக்கடைக்காக தோண்டிய சாலைகள் போடுவது உள்ளிட்ட மீதமுள்ள பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் எனவும்; ஒகேனக்கல் கூட்டு குடிநீர், காவிரி கூட்டு குடிநீருகாக ரூ.14 ஆயிரம் கோடிக்கு லோன், குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும் மேலும், அவற்றை தனியாருக்கு ஏலமும் விடப்பட்டதோடு குப்பைகளில் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை அழிப்பது குறித்தும் திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.

அம்ரூத் திட்டத்தில் 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஆங்காங்கே பைப்புகள் உடைந்து குழாய்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும்; இதற்கான ஒப்பந்ததாரரும் ஓடிவிட்டார் எனவும் கூறிய அவர், அவர் ஓடியதால் நான் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வியெழுப்பினார். மக்கள் குப்பைகள் கொளுத்துவதை தடுக்க ஆங்காங்கே குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குழந்தைகள் கல்வி குறித்து எஸ்.ஐ பேசிய வீடியோ: நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய நடிகர் பாலாஜி

Last Updated :Apr 24, 2023, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.