ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி: திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 5:43 PM IST

Thiruvalluvar University
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

Thiruvalluvar University: மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் நாளை (டிச.5) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தேர்வுக் கட்டுபாடு அலுவலர் அறிவித்துள்ளார்.

வேலூர்: மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 380 கி.மீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 380 கி.மீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுவடைந்து (டிச .4) இன்று முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையுடன் புயல் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மிதமான கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் எனவும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த மிக்ஜாம் புயல் காரணமாக, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் நாளை (டிச. 5) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், இதற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தற்பொழுது புயலின் காரணமாக, இன்று (டிச. 4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், டிச.4 முதல் டிச.9 வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடைபெற இருக்கும் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'MICHAUNG' புயல் மழை எதிரொலி: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.