ETV Bharat / state

வேலூர் திருவள்ளுவர் பல்கலை. மதிப்பெண் பட்டியலில் மீண்டும் குளறுபடி!

author img

By

Published : Jul 22, 2023, 7:36 AM IST

Updated : Jul 22, 2023, 12:12 PM IST

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியீட்டில் மீண்டும் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளதோடு, இதுகுறித்து விளக்கும் கேட்கும் மாணவர்கள் அலைக்கழிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியீட்டில் மீண்டும் குளறுபடிகள்!
வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியீட்டில் மீண்டும் குளறுபடிகள்!

வேலூர் திருவள்ளுவர் பல்கலை. மதிப்பெண் பட்டியலில் மீண்டும் குளறுபடி!

வேலூர்: வேலூர் மாவட்டம், சேர்க்காட்டில் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகினறன.

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில், கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய முறையும், தொடர்ந்து குளறுபடிகளாகவே இருந்து வந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளும், மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மிகவும் குளறுபடியாக அமைந்து உள்ளது. தற்போது இறுதி ஆண்டு முடித்தவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல்கள், அவர்கள் படித்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது இதில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு Withheld(நிறுத்திவைப்பு) என போட்டு உள்ளனர்.

மதிப்பெண் போடாமல், நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இதுபோல் தேர்வு முடிவுகள், பேஸ் 1, பேஸ் 2 என முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதேபோன்று 25 மதிப்பெண்கள் மட்டுமே கொண்ட இன்டர்னல் மார்க்குக்கு 100- 100 என போடப்பட்டு உள்ளது. இவ்வாறு பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், இறுதி ஆண்டு மாணவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதிலும் குறிப்பாக க்யூ ஆர் கோட் விடைத்தாள்கள் இல்லை என்றும், அந்த விடைத்தாள்கள் தொலைந்துவிட்டதாக, பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒன்று அல்லது இரண்டு விடைத்தாள்கள் தொலைந்தால் சரி என்று ஒப்புக் கொள்ளலாம், அது எப்படி, எல்லா மாணவர்களின் விடைத்தாள்களும் தொலையும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையான பணிகள் அவுட் சோர்சிங் மூலம் செய்யப்படுவதால் இதுபோன்று குளறுபடிகள் நிகழ்வது தெரிய வந்துள்ளது.

இந்த குளறுபடிகள் குறித்து இரண்டு நாட்களாக பல்கலைக்கழக அதிகாரிகள், துணை வேந்தரை உட்பட பலரை தொடர்புகொண்டு கேட்ட போது, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரிடம் கேட்க வேண்டுமெனக் கூறி, அவர் நழுவிக் கொண்டார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரோ, யாருடைய செல்போன் அழைப்புகளையும் எடுப்பது கிடையாது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்தை அணுகி, மதிப்பெண் வரவில்லை என்று கேட்டால், சிலர் முறைகேடான பணிகளில் ஈடுபட்டு அவர்களுக்கு மதிப்பெண்ணை பெற்றுத் தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை அகற்றிட, உயர் கல்வித்துறையும், திருவள்ளுவர் பல்கலைக்கழகமும், தமிழக அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: 295 உயிர்களை பலி வாங்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன? - ரயில்வே அமைச்சர் விளக்கம்!

Last Updated : Jul 22, 2023, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.