ETV Bharat / state

வேலூரில் பதற்றமான இடங்களில் கண்காணிப்பு

author img

By

Published : Oct 9, 2021, 8:14 AM IST

local body election  election  second phase of local body election  second phase  vellore news  vellore latest news  vellore election update  வேலூர் செய்திகள்  தேர்தல்  ஊரக உள்ளாட்சி தேர்தல்  இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு  வாக்குப் பதிவு
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. அதன்படி, வேலூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

வேலூர்: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் கடந்த 6ஆம் தேதி அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று (அக்டோபர் 9) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இன்று (அக்டோபர் 9) வேலூர், அணைகட்டு, கணியம்பாடி ஆகிய மூன்று ஒன்றியங்களில், காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

இம்மூன்று ஒன்றியங்களில் மொத்தம் 469 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்களில் ஐந்து மாவட்ட கவுன்சிலர்கள், 50 ஒன்றிய கவுன்சிலர்கள், 87 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 697 வார்டு உறுப்பினர்கள் என, மொத்தம் உள்ள 839 இடங்களுக்கு, இரண்டாயிரத்து 508 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் ஆறு ஊராட்சி மன்றத் தலைவர்கள், 80 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 86 பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். வாக்குப்பதிவின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, வாக்குச்சாவடி பணியாளர்கள், காவல் துறையினர் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றமானதாகக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவைக் கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பலத்த பாதுகாப்பில் நெல்லை: விறுவிறுப்பாக நடந்துவரும் வாக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.