ETV Bharat / state

சிறையிலிருந்து வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கு - உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன்!

author img

By

Published : May 17, 2022, 3:21 PM IST

அனுமதியின்றி சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், ராஜிவ்காந்தி கொலைக்குற்றவாளி முருகன்.

ராஜிவ்காந்தி கொலை குற்றவாளி முருகன்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி முருகன்

வேலூரில் அனுமதியின்றி சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளி முருகன் ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்றைய சாட்சி விசாரணையின்போது தானே ஆஜராகி வாதாடினார். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. மீண்டும் இன்று முருகனையும், வழக்கின் விசாரணை அலுவலரையும், கூடுதல் சாட்சியையும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் முருகன் 16 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் உடல் சோர்வுடன், கை தாங்கலாக நீதிமன்றத்துக்கு வந்து ஆஜரானார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருபவர், முருகன். இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு சிறைத்துறை மூலம் இவருக்கு அனுமதிக்கப்பட்ட வீடியோ காலில் சிறை விதியை மீறி, வெளிநாட்டுக்கு கூடுதலாக (கான்ஃபெரன்ஸ் கால்) வீடியோ கால் செய்ததாக சிறைத்துறை முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது.

இதுதொடர்பாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக முருகன் மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றம் அழைத்து வந்து ஆஜர்படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி இல்லாததால், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3-ல் இன்று விசாரணை நடைபெற்றது.

சிறைக்காவலர் தங்கமாயன் ஆஜராகி நீதிபதி முன் சாட்சி அளித்தார். சாட்சியத்தின் மீதான விசாரணை நடைபெற்றது. மேலும் இவ்வழக்கில் முருகனே தன் வழக்குத் தொடர்பாக ஆஜராகி தானே வாதாடினார். அப்போது தனக்கு எதிராக சாட்சியம் அளித்த சிறைக்காவலரிடம் நீண்ட நேரம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக (முக்கால் மணி நேரம்) விசாரணை நடைபெற்றது.

அனுமதியின்றி சிறையிலிருந்து வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜிவ்கொலை குற்றவாளி முருகன்

பின்னர் வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3ஆவது நீதிபதி பத்மகுமாரி இன்று மதியம் 2.30 மணிக்கு மீண்டும் முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், இவ்வழக்கின் விசாரணை அலுவலரையும், கூடுதல் சாட்சியத்தையும் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து முருகன் மீண்டும் பலத்த காவல் துறைப் பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தனக்கு 6 நாள் அவசர கால பரோல் விடுப்பு வழங்ககோரி சிறைத்துறைக்கு முருகன் அளித்த மனு நிராகரிக்கப்பட்டதால், தனக்கு 6 நாள் பரோல் விடுப்பு வழங்ககோரி கடந்த மே 1ஆம் தேதி முதல் இன்று 16ஆவது நாளாக சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இதனால் இன்று நீதிமன்றத்துக்கு வரும் போது உடல் சோர்வுடன், காவலர்கள் கை தாங்கலாகவும் அழைத்து வரப்பட்டார்.

இதையும் படிங்க: ராஜிவ் கொலை வழக்கு; தண்டனை கைதி முருகனுக்கு பல் வலி சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.