ETV Bharat / state

வேலூரில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: வென்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

author img

By

Published : Mar 31, 2021, 2:34 PM IST

வேலூர்: 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி மாணாக்கர் பங்கேற்ற மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

election awareness marathon
election awareness marathon

எதிர் வரும் தேர்தலில் பொதுமக்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணாக்கர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கியது.

கிரீன் சர்கில் வரை 5 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாரத்தான் போட்டியை வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோகுல்நாத், அமர்நாத், விஷ்வா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

முதல் பரிசை வென்ற மாணவி
முதல் பரிசு வென்ற மாணவி

அதேபோல் பெண்கள் பிரிவில் கார்ணாம்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் ரேவதி, இந்துமதி, சிவரஞ்சனி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். மாவட்டத் தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்தப் போட்டியில் மகளிர் திட்டம் மற்றும் விளையாட்டுத் துறையை சேர்ந்த பல்வேறு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:’ஊர்வலம் செல்வதைத் தவிருங்கள்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.