ETV Bharat / state

கால்நடைத்துறையில் வேலை வாங்கித்தருவதாக 3 பேரிடம் அரசு அலுவலர் மோசடி;விசாரிக்க கலெக்டர் உத்தரவு!

author img

By

Published : Jul 27, 2022, 5:43 PM IST

கால்நடை துறையில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் பணம் மோசடி; கால்நடை மருத்துவமனை உதவியாளரை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கால்நடை துறையில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் பணம் மோசடி; கால்நடை மருத்துவமனை உதவியாளரை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கால்நடைத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 3 பேரிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக கால்நடை மருத்துவமனை உதவியாளர் மீது எழுந்த புகாரினை விசாரித்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராகப்பணியாற்றி வந்தவர், சாந்தி. இவர் தற்போது குடியாத்தம் கல்லூரி கால்நடை மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சாந்தி கடந்த 2019ஆம் ஆண்டு மாச்சனூர் கிராமத்தைச்சேர்ந்த சிவச்சந்திரன், அவரது சகோதரர் பிரபுதேவா மற்றும் ராகவேந்திரன் ஆகிய 3 பேரிடமும், கால்நடைத்துறையில் பணியிடம் காலியாக இருப்பதாகவும் ரூ.4 லட்சம் கொடுத்தால் டாக்டர் ரமேஷ் மூலம் வேலை வாங்கித்தருவதாகவும்கூறி 3 பேரிடமும் தலா 50 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.

ஆனால், இதுவரை வேலை வாங்கித் தரவில்லை என்றும், பணத்தையும் திரும்பத்தரவில்லை என்றும் கூறி, சிவச்சந்திரன் உட்பட 5 பேர் நேற்று வேலூரில் உள்ள கால்நடைத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இப்புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க குடியாத்தம் கோட்டாட்சியர் தனஞ்செயனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் - 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.